For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பழைய காலத்து டெக்னிக்யா இது” டேஞ்சர் பேட்ஸ்மேனுக்கு கோலி போட்ட ஸ்கெட்ச்.. சிராஜின் தரமான சம்பவம்!

மும்பை: அச்சுறுத்தல் கொடுக்கும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டாம் லேதமை, சிம்பிள் ப்ளான் மூலம் விராட் கோலி விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்துள்ளது.

“இனி தான் தரமான சம்பவம் இருக்கு”.. விராட் கோலி சொன்ன சூசக தகவல்.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்! “இனி தான் தரமான சம்பவம் இருக்கு”.. விராட் கோலி சொன்ன சூசக தகவல்.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

 2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் காபாற்றினார். ஒற்றையாளாக அவர் 311 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 150 ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த சுப்மன் கில் 44 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். இதில் சுவாரஸ்ய விஷயமாக நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல நியூசிலாந்தின் ஓப்பனிங் வீரர்கள் டாம் லாதம் மற்றும் வில் யங் அச்சுறுத்தல் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக டாம் லாதம் முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலுமே (95), (52) என அடித்து அசத்தினார். இந்த போட்டியில் அவர் கேப்டனாகவும் செயல்படுவதால் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

பவுன்சர்

பவுன்சர்

இதற்காக கோலி ஸ்கெட்ச் போட்டார். அதாவது முதல் டெஸ்டில் லாதமிற்கு எதிராக பவுன்சர் பந்துகளே பெருமளவில் போடப்படவில்லை. அனைத்து பந்துகளும் ஃபுல் லெந்தில் இருந்ததால் சுலபமாக எதிர்கொண்டார். இதனால் ஏன் பவுன்சர் போடவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இதனை நன்கு புரிந்துக்கொண்ட விராட் கோலி இன்றைய போட்டியில் பவுன்சர் பந்து மூலம் லாதமை வெளியேற்றினார். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதனை செயல்படுத்தினார்.

சூப்பர் ப்ளான்

சூப்பர் ப்ளான்

மதிய வேளையில் பிட்ச்-ல் நல்ல வேகம் உள்ள போதும், ரன்கள் வேகமாக உயர்த்தலாம். எனவே பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் வெயில் இருக்கும் போது அடித்து ஆட நினைப்பார்கள். இந்த நேரத்தில் தான் சிராஜை கொண்டு வந்தார் கோலி. நீண்ட நேரமாக பவுண்டரி அடிக்க முடியாமல் லாதம் தவித்த நேரத்தில், சிராஜ் நன்கு தூக்கி அடிக்கும்படி பவுன்சரி பந்தை போட்டுக்கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னரே கோலி பவுண்டரி எல்லைக்கு அருகே ஃபீல்டரை நிற்கவைத்ததால் சுலபமாக கேட்ச் கொடுத்து லாதம் வெளியேறினார். இதனால் கோலியின் கேப்டன்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Story first published: Saturday, December 4, 2021, 16:45 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Virat kohli's simple plan helps to dismiss the danger batsmen tom latham out in Mumbai test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X