For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்திய அணியை மீட்டவரே இல்லையா”.. 2வது டெஸ்டில் வெளியேறும் முக்கிய வீரர்.. காரணம் என்ன?

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்காக ஆந்திராவை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் ப்ளேயிங் 11க்கு அழைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. நாளைய போட்டி தான் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

இதனால் இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வில் இருந்த விராட் கோலி, 2வது டெஸ்டில் மீண்டும் அணிக்குள் வருகிறார். இதனால் அவருக்கு இடமளித்து அணியில் இருந்து ரகானே அல்லது புஜாரா ஆகியோரில் யாரேனும் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிட்ச்-ன் சூழலுக்கேற்ப 2 ஸ்பின்னர்கள் குறைக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர்களை ப்ளேயிங் 11ல் கொண்டு வருவார்கள் எனக்கூறப்படுகிறது.

முக்கிய மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள்

இந்நிலையில் இந்திய அணியில் எதிர்பாராத முக்கிய மாற்றம் ஒன்று நடைபெறவுள்ளது. அதாவது விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹாவுக்கு பதிலாக கே.எஸ். பரத் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு பெறவுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் போது சாஹாவுக்கு கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 2வது இன்னிங்ஸின் பொது சாஹாவுக்கு மாற்றாக கே.எல்.பரத் சப்ஸ்டிட்யூட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

இதன் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியிலும் சாஹா களமிறங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. இதுகுறித்து பேசிய பவுலிங் கோச், சாஹாவின் உடல் நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கோலி ஆகியோருடன் பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளைக்குள் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது.

Recommended Video

IND vs NZ 2வது Test நடைபெறுமா? Mumbai weather forecast | Oneindia Tamil
 இந்திய அணிக்கு பின்னடைவு

இந்திய அணிக்கு பின்னடைவு

ஒருவேளை 2வது டெஸ்ட் போட்டியில் சாஹா விளையாடவில்லை என்றால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் முதல் டெஸ்டில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட விருதிமான் சாஹா 61 ரன்கள் அடித்து உதவினார். அதுவும் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 51 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, காப்பாற்றி கொண்டு வந்தார்.

Story first published: Thursday, December 2, 2021, 16:24 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
Wicket keeper Wriddhiman Saha stays doubtful, KS Bharat asked to be ready for 2nd test against newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X