இதை நோட் பண்ணீங்களா.. கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பால்?.. -ஆதாரத்துடன் கூறும் நெட்டிசன்கள்!

துபாயில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

KL Rahul out ஆனது No Ball.. Twitter-ல் ரசிகர்கள் இடையே விவாதம்

6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்! 6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதற்கு ஏற்ப அவர்களுக்கு தொடக்கமே தித்திப்பாக அமைந்தது.

 ஷாகின் அப்ரிடி வேகம்

ஷாகின் அப்ரிடி வேகம்

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், கே..எல்.ராகுல் ஒற்றை இலக்க ரன்னிலும் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்தனர். சூர்யகுமார் யாதவும் ஏமாற்றம் அளித்தார். 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர் கேப்டன் கோலியும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும்.

பாகிஸ்தான் அபார வெற்றி

பாகிஸ்தான் அபார வெற்றி

கோலி 56 ரன்கள், ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுக்க ஜடேஜா, ஹார்திக் பாண்ட்யா மோசமாக சொதப்ப இந்தியா வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. சவால் அளிக்க கூடிய இலக்கு என்று சொல்லப்பட்டாலும், இதனை மிக எளிதாக்கினார்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான். பேட்டிங்கை போலவே, ஒட்டு மொத்த பவுலர்களும் சொதப்ப 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்.

கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பாலா?

கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பாலா?

இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 8 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 ரன்களில் அவுட்டானார். ஷாகின் அப்ரிடி பவுலிங்கில் அவர் போல்டனார். ஆனால் கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பால் என்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஷாகின் அப்ரிடி அந்த பந்தை வீசும்போது பவுலிங் கிரீஸுக்கு வெளியே காலை வைத்து விட்ட வீடியோ, புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அம்பயர் தூங்கி விட்டார்

அம்பயர் தூங்கி விட்டார்

இந்த பந்து நோ-பால் என்றும் அம்பயர் இதனை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''இதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை.

இது ஒரு நோ பால்'' என்று நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ''களத்தில் இருந்த அம்பயர்தான் தூங்கி விட்டார். 3-வது நடுவர் என்ன செய்தார்?'' என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The ball out of KL Rahul is spreading virally on the internet as No Ball. That means the video of Shaqin Afridi putting his foot outside the bowling crease when he threw the ball, the photo is currently going viral
Story first published: Monday, October 25, 2021, 0:09 [IST]
Other articles published on Oct 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X