For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செல்பி எடுக்காதீங்கய்யா.. சொன்னா கேளுங்க.. கொரோனா வந்துரும்.. பிசிசிஐ போட்ட ஆர்டர்!

தரம்சலா: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 7 முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது. எல்லாம் இந்த கொரோனா வைரஸ் படுத்தும் பாடுதான் காரணம்.

Recommended Video

Ind vs SA 1st ODI | SA With India Tour After Corona Risk | Chahal wears face mask

எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பீதியாக இருக்கிறது. குறிப்பாக விளையாட்டு உலகை இது ரொம்பவே மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல போட்டித் தொடர்களை ரத்து செய்து விட்டனர். இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர் கூட ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது வீரர்களுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக 7 முக்கியமான கட்டளைகளை இந்திய அணி பிறப்பித்துள்ளது.

 கொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு! கொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு!

 வெளியில் போய் சாப்பிடாதீங்க

வெளியில் போய் சாப்பிடாதீங்க

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு வீரர்களுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வெளியில் போய் சாப்பிடுவதை வீரர்கள் அறவே தவிர்க்க வேண்டும். இதை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல ரசிகர்களுடன் நெருங்கி நின்று செல்பி எடுப்பது கை குலுக்குவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

 செல்போன்களைத் தொடாதீங்க

செல்போன்களைத் தொடாதீங்க

அணியினரைத் தவிர வேறு யாரிடமும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தெரியாதவர்களின் செல்போன்களைத் தொடவே கூடாது. அணியினர் பயணிக்கும் விமானம், தங்கும் ஹோட்டல் அறைகள், டிரஸ்ஸிங் ரூம்கள் போன்றவற்றை வீரர்கள் வருவதற்கு முன்பும் கிளம்பிச் சென்ற பிறகும் சானிட்டைஸ் செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.

 டாய்லெட் சுத்தமாக இருக்கணும்

டாய்லெட் சுத்தமாக இருக்கணும்

ஸ்டேடியத்தில் உள்ள கழிப்பறைகளில் தேவையான அளவுக்கு கைகளைக் கழுவும் சானிட்டைசர் இருக்க வேண்டும். யாருக்காவது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கண்காணிப்பு செய்யவும் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும்.

 அடிக்கடி கை கழுவுங்க

அடிக்கடி கை கழுவுங்க

வீரர்கள் அவ்வப்போது தங்களது கைகளை குறைந்தது 20 விநாடிகளாவது கழுவிக் கொள்ள வேண்டும். கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்தும் வீரர்களுக்கும், அணியினருக்கும் அறிவுறுத்ததப்பட்டுள்ளது. அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். இறுமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் வாயை கர்ச்சீப்பால் மூடிக் கொள்ள வேண்டும்.

 வாயைத் தொடாதீங்க

வாயைத் தொடாதீங்க

வீரர்கள் அல்லது அணியினர் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, உள்ளிட்ட ஏதேனும் இருந்தால் உடனடியாக அணியின் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். முகம், வாய், மூக்கு, கண்களை தொடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கட்டளைகளை இந்திய அணியினருக்கு மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடர் மட்டுமல்லாமல் வருகிற ஐபிஎல் தொடரிலும் இது பின்பற்றப்படுமாம்.

Story first published: Thursday, March 12, 2020, 12:17 [IST]
Other articles published on Mar 12, 2020
English summary
BCCI has issued a 7-point Coronavirus diktat to the players of Team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X