For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வான வேடிக்கை உறுதி!!”.. முதல் ஒருநாள் போட்டிக்கான அட்டகாச பிட்ச் மற்றும் வானிலை.. ஆனால் ஒரு சிக்கல்

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து காத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

ஐபிஎல்: “3 வீரர்களில் அணியின் மொத்த பலம்” சிஎஸ்கேவுக்கு சவால் விடும் அகமதாபாத்.. யார் அவர்கள்!ஐபிஎல்: “3 வீரர்களில் அணியின் மொத்த பலம்” சிஎஸ்கேவுக்கு சவால் விடும் அகமதாபாத்.. யார் அவர்கள்!

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்துவிட்டு செல்ல ஆவலுடன் காத்துள்ளது.

சீனியர் வீரர்கள்

சீனியர் வீரர்கள்

கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவதை தாண்டி, விராட் கோலி மீண்டும் ஒரு சக அணி வீரராக விளையாடப்போவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல சீனியர் வீரர்கள் ஷிகர் தவான், அஸ்வின், யுவேந்திர சஹால் போன்ற வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆவலுடன் உள்ளனர். இதனால் போட்டியில் இந்திய அணியின் கை ஒருபடி மேல் ஓங்கியுள்ளது.

வானிலை என்ன

வானிலை என்ன

இந்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் பார்ல் நகரத்தில் இன்று மோசமான வானிலை நிலவி வருகிறது. மாலை நேரத்தில் மழை இருக்கும். ஆனால் போட்டி தினமான நாளை மழைக்கான வாய்ப்பு துளிக்கூட இல்லை. 33 டிகிரி அளவிற்கு வெயில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

போலாந்து பார்க் மைதான பிட்ச்-ஐ பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். அவர்களுக்கு பவுன்சர்கள் எடுபடும். ஆனால் அவுட் ஃபீல்ட் வறண்டிருக்கும் என்பதால் நிதானமாக பொறுத்திருந்து விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு இங்கு சதம் நிச்சயம் உள்ளது. மொத்தத்தில் இந்த களத்தில் 300+ ரன்கள் என்ற அதிக ஸ்கோர் போட்டியை காணலாம். ஆனால் அவசரப்பட்டு அதிரடி காட்டினால் வெகு சீக்கிரம் விக்கெட்டுகளை பறிகொடுக்க நேரிடும்.

முதல் பேட்டிங்

முதல் பேட்டிங்

இந்திய அணியை பொறுத்தவரையில் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். ராகுல் ஒருபுறம் வேகமாக ரன்களை உயர்த்தினாலும், தவான் நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் கொடுக்கக்கூடியவர். இதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தவானுக்கு நல்ல புள்ளிவிவரங்கள் உள்ளன. அவருக்கு பின்னர் விராட் கோலி உள்ளார். எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 300+ ஸ்கோர் உறுதியாக கிடைக்கும்.

Recommended Video

Baby Ab de Villiers: South Africa U19's Dewald Brevis goes viral | OneIndia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது சிராஜ், யுவேந்திர சாஹல்

Story first published: Tuesday, January 18, 2022, 16:57 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
The three-match ODI series between India and South Africa starts tomorrow. The 3rd ODI against South Africa is going to be a feast for cricket fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X