For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார புதுசுனு சொன்னீங்க... வெங்கடேஷ் விட்ட “கிளாசிக் த்ரோ”.. வியந்துப்போன தென்னாப்பிரிக்க வீரர்கள்!!

பார்ல் : முதல் ஒருநாள் போட்டியின் போது இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஃபீல்டிங்கில் வீசிய த்ரோ அனைவருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி போலாண்ட் பார்க் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை அடித்துள்ளது.

“வான வேடிக்கை உறுதி!!”.. முதல் ஒருநாள் போட்டிக்கான அட்டகாச பிட்ச் மற்றும் வானிலை.. ஆனால் ஒரு சிக்கல்“வான வேடிக்கை உறுதி!!”.. முதல் ஒருநாள் போட்டிக்கான அட்டகாச பிட்ச் மற்றும் வானிலை.. ஆனால் ஒரு சிக்கல்

வெங்கடேஷ் அறிமுகம்

வெங்கடேஷ் அறிமுகம்

தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் பார்ட்னர்ஷிப்பை வளர்த்த போதும், வெங்கடேஷ் ஐயர் அதற்கு ஆப்பு வைத்து அனுப்பினார். வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் என ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமானார்.

சிறப்பான த்ரோ

சிறப்பான த்ரோ

ஆட்டத்தின் 17வது ஓவரின் போது அஸ்வின் வீசிய பந்தை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் ஓட முயன்றார். ஆனால் பந்து நேராக அறிமுக வீரர் வெங்கடேஷிடம் சென்றது. இரு பேட்ஸ்மேன்களும் மிக வேகமாக ஓடியபோதும், வெங்கடேஷ் ஐயர் வீசிய த்ரோ நேராக ஸ்டம்பில் பட்டு விக்கெட் ஆனது.

கே.எல்.ராகுல் வைத்த நம்பிக்கை

கே.எல்.ராகுல் வைத்த நம்பிக்கை

பொதுவாக அறிமுக வீரர்களை மிகவும் குறுகிய வட்டத்திற்குள் ஃபீல்டிங் நிற்க வைக்க கேப்டன்கள் யோசனை செய்வார்கள். இதனால் அவர் பதற்றத்தில் சொதப்புவார் என எதிர்பார்த்து ஓடிய மர்க்ரமுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. முதல் ஆட்டத்திலேயே இப்படி ஒரு த்ரோவா என இந்திய வீரர்களே வியப்படைந்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஃபீல்டிங்கில் அசத்தி நம்பிக்கையை ஏற்படுத்திய வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மர்க்ரமின் விக்கெட்டிற்கு பிறகு ஜோடி சேர்ந்த வாண்டர் டுசைன் மற்றும் பவுமா ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அப்போதும் கூட வெங்கடேஷ் ஐயரின் பவுலிங் மீது நம்பிக்கை வைக்கவில்லை கே.எல்.ராகுல். இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, January 19, 2022, 17:46 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
The first ODI between India and South Africa is being played at Poland Park. In this situation, the throw made by youngster Venkatesh Iyer in the field during the first ODI has taken everyone by surprise.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X