For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்

பார்ல்: இந்தியா. தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்ல் போலாந்து மைதானத்தில் தொடங்கியது

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு கோலி சாதாரண வீரராக களமிறங்குகிறார். அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். கேப்டனாக கே.எல்.ராகுல் முதல் முறையாக ஒரு நாள் போட்டிக்கு கனமிறங்கி, சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

சச்சின் சாதனையை உடைக்க கே.எல்.ராகுலுக்கு அரிய வாய்ப்பு..!! கேப்டனாக சாதிப்பாரா ராகுல்..?சச்சின் சாதனையை உடைக்க கே.எல்.ராகுலுக்கு அரிய வாய்ப்பு..!! கேப்டனாக சாதிப்பாரா ராகுல்..?

ருத்துராஜ்

ருத்துராஜ்

இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். கே.எல்.ராகுல் 2 ஆல் ரவுண்டர் உள்ளிட்ட 6 பந்துவீவ்சசாளர்களை அணியில் தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரராக அனுபவ வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் சதம் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆடுகளம் தொய்வு

ஆடுகளம் தொய்வு

மைதானமும் சிறியது என்பதால் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும்,. இருப்பினும் ஆட்டத்தின் 2வது பாதியில் ஆடுகளம் தொய்வாக செயல்பட தொடங்கும். இதனால் 2வதாக பேட்டிங் செய்யும் அணி ரன்களை துரத்த சற்று கடினமாக இருக்கும். இதனால் தென்னாப்பிரிக்க அணியை குறைந்த ரன்களில் சுருட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.

பும்ரா அபாரம்

பும்ரா அபாரம்

இந்த நிலையில், பும்ரா , புவனேஸ்வர் குமார் ஜோடி தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு நெருக்கடியை தந்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிமன் மாலன் 6 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குயின்டன் டி காக், பெவுமா ஜோடி ரன்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், புவனேஸ்வர் குமார், பும்ரா, சாஹல்

குயின்டன் டி காக், ஜென்னிமன் மாலன், பெவுமா, ஏய்டன் மார்க்ரம், வெண்டர் டுசன்,டேவிட் மில்லர், ஆண்டில் பெலுக்வாயோ, மார்கோ ஜென்சன்,கேசவ் மகாராஜ், லுங்கி கிடி, தப்ரைஸ் ஷம்சி

Story first published: Wednesday, January 19, 2022, 16:16 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
India vs South Africa 1st odi SA won the toss and choose to bat 4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X