“விராட் கோலியின் சம்பவம் உறுதி”அடித்துக் கூறும் தென்னாப்பிரிக்க சீனியர்.. பிட்ச் தந்த சூப்பர் பரிசு!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதம் உறுதி என அந்நாட்டின் முன்னாள் வீரரே கணித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று நடைபெறுகிறது.

அனைத்துவிதமான கேப்டன்சிகளில் இருந்தும் விலகிய விராட் கோலி, ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக இந்த தொடரில் விளையாடவுள்ளார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

“சிராஜ் மீதே நம்பிக்கை இல்லை”.. ப்ளேயிங் 11ல் கடைசி நேர ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்! “சிராஜ் மீதே நம்பிக்கை இல்லை”.. ப்ளேயிங் 11ல் கடைசி நேர ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்!

விராட் கோலி பேட்டிங்

விராட் கோலி பேட்டிங்

இந்திய அணியின் தூணான விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக எந்த வடிவ கிரிக்கெட்டிலும் சதம் காணவில்லை. அவரின் 71வது சதத்தை பூர்த்தி செய்வதற்கான காத்திருப்பு நீண்டுக் கொண்டே செல்கிறது. எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலாவது அது நிறைவேறுமா என ரசிகர்கள் காத்துள்ளனர்.

கோலி சதம் உறுதி

கோலி சதம் உறுதி

இந்நிலையில் அவர்களுக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நற்செய்தி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்யக்கூடியது 2 மைதானங்களில் தான். அதில் ஒன்று கேப்டவுனில் உள்ள நியூலாண்ட் மைதானம். இங்கு அவரின் ஆட்டமே வேறு மாதிரியாக இருக்கும். இதனை நான் நன்கு அறிவேன். தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்தை கூட அவர் அடிக்காமல் நான் பார்த்ததே இல்லை.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் ஒரு சதமாவது நிச்சயம் உள்ளது. போட்டியை பொறுத்தவரையிலும் இந்திய அணி தான் வெற்றி பெறும். முதல் 2 போட்டிகளும் பார்ல் மைதானத்தில் நடப்பதால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். எனவே 2 -1 என இந்தியா தொடரை கைப்பற்றும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Sunil Gavaskar explains why Rohit Sharma shouldn’t be Test captain | Oneindia Tamil
என்ன காரணம்

என்ன காரணம்

மோர்னே மார்க்கல் கூறியதை போன்றே பார்ல் மைதானம் இந்தியாவுக்கு சாதகமானது தான். இந்த களத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300+ ரன்கள் அடிப்பது பெரும் சிரமமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்திய அணியில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி இன்னிங்ஸ், ஷிகர் தவான், விராட் கோலி கம்பேக், வெங்கடேஷ் ஐயரின் அதிரடி என பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The three-match ODI series between India and South Africa takes place today. Former South Africa player believes Virat kohli will definitely score century in India vs South africa 1st ODI
Story first published: Wednesday, January 19, 2022, 12:23 [IST]
Other articles published on Jan 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X