“டாஸ் முதல் 50வது ஓவர் வரை”.. முதல் போட்டியில் இந்தியாவுக்கான 4 வியூகங்கள்.. வெற்றி பெற அது கட்டாயம்

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 4 முக்கிய விஷயங்களை செய்தே ஆக வேண்டும்.

டெஸ்ட் தொடரில் மோசமான அடிவாங்கிய இந்திய அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடிகளை கொடுக்க காத்துள்ளது.

அதன்படி இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பார்ல் நகரத்தில் நடைபெறவுள்ளது.

அப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..அப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..

டாஸ் மிக முக்கியம்

டாஸ் மிக முக்கியம்

போட்டி நடைபெறும் போலாந்து பார்க் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். இங்கு பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன்களை சேர்த்தால் முதலில் பேட்டிங் செய்து சராசரியாக 300 ரன்கள் அடித்துவிடலாம். 2வது இன்னிங்ஸில் 250 ரன்கள் தான் இங்கு அதிகபட்சமாக விரட்டப்பட்ட இலக்காகும். எனவே இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தியாக வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் தொடரிலேயே ஓப்பனிங் வீரர்களின் சொதப்பல் தான் இந்தியாவின் தோல்விக்கு அடித்தளம் போட்டிருந்தது. முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல் அடித்த சதம் இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்ததன் விளைவே வெற்றியாக வந்தது. கே.எல்.ராகுலுக்கு கேப்டன் என்ற பொறுப்பு வேறு உள்ளதால் ரன் குவித்தே தீர வேண்டும். மற்றொரு புறம் சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு இது கம்பேக் கொடுக்க முக்கியமான ஆட்டமாகும். எனவே அவர் இதனை பயன்படுத்திக்கொள்ள அதிக ஸ்கோர் சேர்க்க வேண்டும்.

 விராட்டின் வாய்ப்பு

விராட்டின் வாய்ப்பு

இந்த களத்தில் விராட் கோலிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. தற்போது கேப்டன்சி பொறுப்புகளும் இல்லாததால், கோலி ஒரு பேட்ஸ்மேனாக தனது ஆட்டத்தை தொடங்கவுள்ளார். முன்னாள் வீரர்கள் சிலர் விராட்டின் சதத்தை முதல் ஒருநாள் போட்டியில் பார்த்துவிடலாம் என அதீத நம்பிக்கையுடன் உள்ளனர். அவர் மட்டும் சதத்தை அடித்துவிட்டால் இந்தியா நிச்சயம் பெரிய இலக்கை நிர்ணயித்துவிடும்.

IND vs SA Odi Series-ல் இருந்து South Africa-வின் முக்கிய வீரர் விலகல்
2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்க அணியிலும் தொடக்க வீரர்களை பிரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கவுள்ளது. எனவே முதல் 25 ஓவர்களுக்குள் தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை வீழ்த்திவிட்டால் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றியை பெறலாம். இதற்கு பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் பெரும் பங்காற்ற வேண்டும் என்பது முக்கியமாகும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
4 Important things that Team India shoud do to win in 1st ODI Against south africa
Story first published: Tuesday, January 18, 2022, 17:42 [IST]
Other articles published on Jan 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X