For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒரே போட்டியில் சச்சின், பாண்டிங் ரெக்கார்ட் க்ளோஸ்”.. விராட் கோலி படைக்கவிருக்கும் வரலாறு.. விவரம்!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சச்சின், டிராவிட் உள்ளிட்ட பலரின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரத்தில் நடைபெறவுள்ளது.

“6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!! “6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!!

அனைத்துவிதமான கேப்டன்சி பதவிகளிலும் இருந்து விராட் கோலி விலகியதால், முழு நேர பேட்ஸ்மேனாக அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

சர்வதேச அளவில் 70 சதங்களை இதுவரை விளாசியுள்ள விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வடிவ கிரிக்கெட்டில் கூட சதம் அடிக்கவில்லை. அவரின் சதத்திற்கான காத்திருப்பு நீண்டுக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் சதத்துடன் சேர்த்து பல சாதனைகளை தகர்க்க வாய்ப்புள்ளது.

வரலாற்று சாதனை என்ன

வரலாற்று சாதனை என்ன

ஒருவேளை இன்றைய போட்டியில் சதமடித்தால் சர்வதேச அளவில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் ரிக்கிப்பாண்டிங் உடன் 2வது இடத்தை பகிர்ந்துக்கொள்வார். ரிக்கிப்பாண்டிங் 71 சதங்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.

 சச்சின் இடத்திற்கே கோலி

சச்சின் இடத்திற்கே கோலி

இதே போல ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதமடித்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கோலி, முதலிடத்தில் இருக்கும் சச்சினுக்கு அருகில் சென்று விடுவார்.

சச்சினின் சாதனை

சச்சினின் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையுடன் இருக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சாதனையை விராட் கோலி படைக்க உள்ளார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை 5065 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி 5057 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 8 ரன்கள் அடித்தால் சச்சினை முந்திவிடுவார். இந்த பட்டியலில் எம்எஸ் தோனி : 4520 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Recommended Video

IND vs SA: Skipper KL Rahul to open for India in ODI series | Oneindia Tamil
 அதிக ரன்கள் சாதனை

அதிக ரன்கள் சாதனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 1287 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் அடித்தால் இந்த பட்டியலில் டிராவிட் மற்றும் கங்குலியை முந்தி 2வது இடத்திற்கு முன்னேறுவார்.

1. சச்சின் டெண்டுல்கர் - 2001 ரன்கள்

2. சௌரவ் கங்குலி - 1313 ரன்கள்

3. ராகுல் டிராவிட் - 1309 ரன்கள்

4. விராட் கோலி - 1287 ரன்கள்

Story first published: Wednesday, January 19, 2022, 15:38 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
The three-match ODI series between India and South Africa starts today. In the first ODI against South Africa, Virat Kohli is likely to break the record of many, including Sachin and Dravid.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X