For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்ட்ரி கொடுக்கும் இளம் புயல்”.. 2வது ஒருநாள் போட்டிக்காக இந்தியாவின் வியூகம்.. முழு விவரம்!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடரில் நீடிக்க வேண்டும் என்றால் 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதற்காக ப்ளேயிங் 11 தேர்வும் நடைபெற்று வருகிறது.

“2 பேர் வெளியேறுவது உறுதி” 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11..கே.எல்.ராகுல் அதிரடி முடிவு“2 பேர் வெளியேறுவது உறுதி” 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11..கே.எல்.ராகுல் அதிரடி முடிவு

2வது ஒருநாள் ஆட்டம்

2வது ஒருநாள் ஆட்டம்

இந்திய அணிக்கு கடந்த முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இந்த முறை பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இவர்களின் இடத்திற்காக வெங்கடேஷ் ஐயர் நீக்கப்படவுள்ளார்.

ஷர்துல் நீக்கம்

ஷர்துல் நீக்கம்

இதே போல பவுலிங்கில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்படவுள்ளதாக தெரிகிறது. கடந்த போட்டியில் ஷர்துல் அரைசதம் அடித்திருந்தார் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனால் பவுலிங்கில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களை வாரி வழங்கிய அவருக்கு மாற்றாக முழு நேர வேகப்பந்துவீச்சாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளம் வீரருக்கு வாய்ப்பு

இளம் வீரருக்கு வாய்ப்பு

இதற்காக முகமது சிராஜ் மீண்டும் அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இளம் வீரர் ப்ரஷித் கிருஷ்ணா வாய்ப்பு பெற அதிக வாய்ப்பு உள்ளது. காயத்தால் வெளியேறியிருந்த முகமது சிராஜ் இன்னும் தனது முழு உடற்தகுதியை பெறவில்லை. எனவே முக்கியமான ஆட்டத்தில் அவரை களமிறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பாத கே.எல்.ராகுல் பிரஷித் கிருஷ்ணாவை களம் காண வைக்க திட்டமிட்டுள்ளார்.

பிரஷித் கிருஷ்ணா யார்

பிரஷித் கிருஷ்ணா யார்

ஐபிஎல் தொடர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரஷித் கிருஷ்ணா இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்த 3 போட்டிகளில் 174 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க களத்தில் மிடில் ஆர்டரின் போது பந்தில் நல்ல டேர்னிங் உள்ளது. எனவே அப்போது மிதமான வேகத்தில் வீசக்கூடியவர்களுக்கு விக்கெட் கிடைக்கும். எனவே அதற்காக பிரஷித் கிருஷ்ணா கொண்டு வரப்படலாம். புதிய வீரரை சமாளிக்க தென்னாப்பிரிக்கா திணறும் என்பதால் இந்த வியூகத்திற்கு டிராவிட் ஒப்புதல் அளிக்கலாம்.

Story first published: Thursday, January 20, 2022, 21:07 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
The 2nd ODI between the two teams will be played tomorrow at Poland Park Ground. It has been reported that a young fast bowler will make his debut in the 2nd ODI against South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X