For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் கேப்டன்சி செய்த விராட் கோலி..தலைகீழாக மாறிய 3வது ஒருநாள் ஆட்டம்.. ஷாக்கான எதிரணி வீரர்கள்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் விராட் கோலி தனது கேப்டன்சியை காட்ட வந்ததால் இந்திய அணி தப்பித்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்திய அணி தொடரை இழந்துவிட்டதால், கடைசி ஆட்டத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 சிறந்த பார்ட்னர்ஷிப்

சிறந்த பார்ட்னர்ஷிப்

ஆனால் அதற்கும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிக்கலை ஏற்படுத்தினர். முதலில் பேட்டிங் செய்த அந்த அணியில் தொடக்க வீரர் ஜென்னிமேன் மாலன் 1 ரன், கேப்டன் பவுமா 8 ரன்கள், எய்டன் மர்க்ரம் 15 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டானது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குயிண்டன் டிக்காக், வாண்டர்டுசன் ஜோடி மீண்டும் மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்க அணியை காப்பாற்றினர். அந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ரசிகர்கள் பதற்றம்

ரசிகர்கள் பதற்றம்

டிகாக் 124, வாண்டர் டுசன் 52 ரன்கள் விளாச அந்த அணி 35 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்தது. மேலும் கையில் 6 விக்கெட்கள் இருந்தன. இதனால் இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும் என ரசிகர்கள் பதறினர். ஆனால் அதனை மாற்றி அமைத்தார் விராட் கோலி.

கோலியின் கேப்டன்சி

கோலியின் கேப்டன்சி

கடந்த 2 போட்டிகளில் விராட் கோலி களத்தில் எதுவும் பெரிதாக பேசாமல் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் திடீரென தனது கேப்டன்சி அனுபவங்களை கொண்டு வந்தார். கே.எல்.ராகுலிடம் சென்று அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் எனவும், ஃபீல்ட் செட்டிங் எப்படி இருக்க வேண்டும் எனவும் அறிவுரைகளை கூறினார். மேலும் யுவேந்திர சஹால் பவுலிங் வீசிய போது, ஸ்லிப் திசையில் நின்று கோலி தொடர்ந்து அட்வைஸ் கூறினார்.

தலைகீழான ஆட்டம்

தலைகீழான ஆட்டம்

அவரின் அட்வைஸுக்கு ஏற்றார் போலவே இந்தியாவுக்கு விக்கெட் மழை பொழிந்தது. 35.4 ஓவர்களில் 214/4 என்ற தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு சுருண்டது. அதாவது 73 ரன்களுக்குள் 6 விக்கெட்டை பறிகொடுத்து சொதப்பியது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி அனுபவங்களை இனிமேலாவது புரிந்துக்கொள்ளுங்கள் பிசிசிஐ, அவரை நீக்கி தவறு செய்துவிட்டீர்கள் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, January 23, 2022, 19:00 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
Ex captain Virat kohli's last minute advices to Kl rahul change the whole match of 3rd ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X