For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சிஎஸ்கே வீரர்.. இந்திய அணிக்குள் நிலவும் பிரச்சினை.. காரணம் என்ன?

கேப்டவுன்: இந்திய அணியின் தேர்வில் சிஎஸ்கே வீரர் மட்டும் குறிவைத்து புறக்கணிக்கப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் தொடங்கியது.

இதில் ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2 - 0 என தொடரை இழந்துள்ள இந்திய அணி இந்த போட்டியிலாவது மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

103 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து..!! தொடர்ந்து அடி வாங்கும் இங்கி. வீரர்கள்..மே.இ.தீவுகள் அபாரம்103 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து..!! தொடர்ந்து அடி வாங்கும் இங்கி. வீரர்கள்..மே.இ.தீவுகள் அபாரம்

யார் அவர்?

யார் அவர்?

அந்த வகையில் மாற்றங்களை கொண்டு வந்த கே.எல்.ராகுல், இளம் வீரரை மட்டும் குறிவைத்து புறக்கணித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக ரன் மழை பொழிந்து அசத்திய ருதுராஜ் கெயிக்வாட் தான் அது. 3வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த ருதுராஜ் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்துவிட்டதால், 3வது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் தீபக் சஹார் ஆகியோருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓப்பனிங்கில் மட்டும் ருதுராஜை பரிசோதித்து பார்க்க கே.எல்.ராகுல் விரும்பவில்லை.

2வது முறை

2வது முறை

ருதுராஜ் கெயிக்வாட் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்திய அணிக்குள் பிரச்சினை நிலவுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இந்திய அணியில் தற்போது கேப்டன் ரோகித் சர்மா, துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் முதன்மை தேர்வாக உள்ளனர். ஷிகர் தவான் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதால், அவருக்கு இனி வரும் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே மற்றொரு ஓப்பனரும் சிறப்பாக விளையாடி நிரூபித்துவிட்டால்,அணி தேர்வில் கடும் நெருக்கடி ஏற்படும். எனவே யாருக்கேனும் இனி காயம் ஏற்பட்டால் தான் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறது.

Story first published: Sunday, January 23, 2022, 19:19 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
CSK Star player ruturaj gaikwad didn't get chances in 3rd ODI against South africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X