For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இதுக்கு வேற வழியை பாக்கலாம்” 3வது நடுவரின் குளறுபடியான முடிவு.. ஆத்திரத்தில் விளாசிய அஸ்வின் - கோலி

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 3வது நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசம் அடைந்தனர்.

Recommended Video

IND vs SA 3rd Test-ல் DRS-ல் ஏற்பட்ட குழப்பம்.. கடுப்பான Indian Players

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

கடுப்பான கோலி

கடுப்பான கோலி

இதனால் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்காவின் தூணாக பார்க்கப்பட்ட கேப்டன் டீன் எல்கர் 22 ரன்களுக்கு வெளியேறியிருக்க வேண்டும். அவர் அவுட்தான் என அனைவரும் நம்பினர். ஆனால் டி ஆர் எஸில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார் 3வது நடுவர்.

3வது நடுவர் குளறுபடி

ஆட்டத்தின் 20 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் டீன் எல்கர் எல்.பி.டபள்யூ அவுட் ஆனார். கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் டீன் எல்கர் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். "யாருப்பா இவரு.. இவ்வளவு கீழாக சென்ற பந்திற்கு ரிவ்யூவ் கேட்கிறாரே என பலரும் நகைத்தனர்". ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்காது, விக்கெட் மிஸ்ஸிங் என்பது போன்ற வீடியோவை கான்பித்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

குழம்பிய ரசிகர்கள்

ஒரு சுழற்பந்துவீச்சாளர் போட்ட குட் லெந்த் பந்தானது எப்படி திடீரென பவுன்சாகி ஸ்டம்பிற்கு மேல் எழுந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. டி.ஆர்.எஸில் காண்பித்தது போன்று பவுன்சாகி இருக்க வேண்டும் என்றால், அஸ்வின் 8 அடி உயரத்தில் இருந்து 120+ கிமீ வேகத்தில் பந்தை வீசியிருந்தால் தன முடியும் என ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறினர். இதனால் 3வது நடுவர் டி.ஆர்.எஸ் முடிவில் ஏமாற்று வேலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அஸ்வின் குற்றச்சாட்டு

இதனை கண்டு அதிருப்தியடைந்த ரவிச்சந்திரன் ஸ்வின், ஸ்டம்ப் மைக்கிற்கு அருகில் வந்து, "இதுபோன்ற மிகப்பெரிய போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் வேறு நல்ல வழி இருந்தால் பாருங்கள்" என சாடினார். இதே போல விராட் கோலியும் ஸ்டம்ப் மைக்கில் " உங்கள் அணியினரும் ( தென்னாப்பிரிக்கா) அவ்வபோது பந்தை சேதப்படுத்துகின்றனர்.. அதையும் பாருங்கள்.. எதிரணியை மட்டும் பார்க்க வேண்டாம்.. எப்போதும் அனைத்து இடங்களையும் நியாயமாக பார்வையிடுங்கள்" எனக்கூறினார்.

பெரும் திருப்புமுணை

பெரும் திருப்புமுணை

எல்கருக்கு நாட் அவுட் கொடுத்த இந்த விவகாரம் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அந்த நிகழ்வில் இருந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இதனால் இந்திய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி விஷயத்தை கொடுக்கும் வகையில் எல்கருக்கு பதிலடி கொடுத்தார் விராட் கோலி.

 பழிவாங்கிய விராட் கோலி

பழிவாங்கிய விராட் கோலி

4ம் நாள் ஆட்டத்தின் பும்ரா வீசிய கடைசி பந்தில் எல்கர் எட்ஜாகி கேட்ச் அவுட்டானார். ஆனால் அதற்கு கள நடுவர் நாட் அவுட் கொடுத்தார். இந்த முடிவு தான் வரும் என்பதை எதிர்பார்த்திருந்த கோலி சற்றும் யோசிக்காமல் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் எடுத்தார். அதில் பந்து நன்கு பேட்டில் எட்ஜாகி இருந்தது தெரியவந்தது. இதனால் தற்போது மீண்டும் கெத்தாக ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

Story first published: Thursday, January 13, 2022, 22:40 [IST]
Other articles published on Jan 13, 2022
English summary
Ashwin and Virat kohli gets angry after 3rd umpire gives a unsatisfied decision for Dean elger's review in 3rd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X