“கொஞ்சம் கூட அது இல்லையா??” விராட் கோலியின் தரக்குறைவான செயல்.. விட்டு விளாசிய கவுதம் கம்பீர்!

கேப்டவுன்: 3வது டெஸ்டின் போது தரக்குறைவான வார்த்தைகள் விட்ட விராட் கோலி குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 213 ரன்கள் இலக்காக தென்னாப்பிரிக்க விரட்டி வருகிறது. 4ம் நாள் ஆட்டத்தின் முடிவு வரை அந்த அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

“இதுக்கு வேற வழியை பாக்கலாம்” 3வது நடுவரின் குளறுபடியான முடிவு.. ஆத்திரத்தில் விளாசிய அஸ்வின் - கோலி “இதுக்கு வேற வழியை பாக்கலாம்” 3வது நடுவரின் குளறுபடியான முடிவு.. ஆத்திரத்தில் விளாசிய அஸ்வின் - கோலி

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இந்நிலையில் இந்த போட்டியில் ஒளிபரப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் மீதும் கேப்டன் விராட் கோலி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். 2வது இன்னிங்ஸில் அஸ்வின் வீசிய ஓவரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் எல்பிடபள்யூ ஆனார். அவருக்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் 3வது நடுவரின் ரிவ்யூவின் போது பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்றதாக நாட் அவுட் கொடுக்கப்பட்டது. திடீரென பந்து எப்படி பவுன்சாகும் என விராட் கோலி மற்றும் இந்திய அணியினர் கடும் கோபமடைந்தனர்.

கோலியின் ஆத்திரம்

கோலியின் ஆத்திரம்

ஆத்திரமடைந்த கோலி ஸ்டம்ப் மைக்கிற்கு அருகில் சென்று, " உங்கள் அணியினரும் ( தென்னாப்பிரிக்கா) அவ்வபோது பந்தை சேதப்படுத்துகின்றனர்.. அதையும் பாருங்கள்.. எதிரணியை மட்டுமே எப்போதும் பார்க்க வேண்டாம்.. எப்போதும் அனைத்து இடங்களையும் நியாயமாக பார்வையிடுங்கள்" கடுமையாக கூறினார். இதன் பின்னர் பேசிய கே.எல்.ராகுல் " ஒட்டுமொத்த நாடே 11 வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறது என வார்த்தையை விட்டார். இதற்கு விராட் கோலி, கேமரா குழுவும் அவர்களில் ஒன்று தான் எனச்சாடினார்."

விளாசிய கம்பீர்

விளாசிய கம்பீர்

இந்த நிலையில் விராட் கோலிக்கு தனது கடும் கண்டனத்தை கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது மிகவும் கேவலமான செயல். ஸ்டம்ப் மைக் அருகில் கோலி பக்குவமற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ளார். ஒரு சர்வதேச அணியின் கேப்டனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. தொழில்நுட்பங்கள் ஒன்றும் உங்கள் கையில் இல்லை. இந்த சூழலில் டீன் எல்கர் இருந்தால் கூட இப்படி நடந்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

மயங்கின் விக்கெட்

மயங்கின் விக்கெட்

மயங்க் அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் தான் நடந்தது. வெறும் கண்களால் பார்க்கும் போது அனைவருக்கும் அது எட்ஜானது போன்று தான் தெரிந்தது. ஆனால் மயங்க் அகர்வால் ரிவ்யூவ் எடுத்தபோது, முடிவு வேறு மாதிரி சென்றது. இதனால் டீன் எல்கர் ஒன்றும் கடும் கோபம் கொள்ளைவில்லை. அமைதியாக சென்றார். அந்த பக்குவம் ஏன் கோலியிடம் இல்லை.

IND vs SA 3rd Test-ல் DRS-ல் ஏற்பட்ட குழப்பம்.. கடுப்பான Indian Players
தவறான முன் உதாரணம்

தவறான முன் உதாரணம்

நீங்கள் என்ன விளக்கம் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் ஒரு கேப்டனுக்கு நிதானம் முக்கியம். கோலியின் இந்த செயலை பார்த்து இளம் வீரர்கள் பாதிப்படைவார்கள். இதுகுறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிச்சயம் கோலியிடம் பேசுவார் என நம்புகிறேன் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Gambhir slams virat kohli after his exaggerated words in Stump mic during India vs South africa 3rd test
Story first published: Friday, January 14, 2022, 11:50 [IST]
Other articles published on Jan 14, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X