200 ரன்களே போதும்.. தென்னாப்பிரிக்காவை மிரட்டும் முக்கிய துருப்புச்சீட்டு.. விராட் கோலி ஃபார்முலா!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது.

இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்துள்ளது. இதன் பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியை 210 ரன்களுக்கெல்லாம் சுருட்டிவிட்டது.

ஐபிஎல் இனி அமீரகத்தில் இல்லை... புதிய நாட்டை தேர்வு செய்தது பிசிசிஐ.. பின்னணியில் இந்திய வீரர்கள்!ஐபிஎல் இனி அமீரகத்தில் இல்லை... புதிய நாட்டை தேர்வு செய்தது பிசிசிஐ.. பின்னணியில் இந்திய வீரர்கள்!

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

இதனையடுத்து இந்திய அணி 2வது இன்னிங்ஸிலாவது தனது பேட்டிங் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 7 ரன்களுக்கும் வெளியேறியதால் இந்திய அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. விராட் கோலி மற்றும் புஜாரா ஜோடி தான் அணியை மீட்டு வருகின்றனர்.

முக்கிய துருப்புச்சீட்டு

முக்கிய துருப்புச்சீட்டு

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற கேப்டவுன் மைதானத்தின் பிட்ச்-ஐ உணர்ந்தாலே போதும். நியூலாண்ட்ஸ் பிட்ச்-ஐ பொறுத்தவரை 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே இங்கு இதுவரை பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியான அதிக இலக்கை எந்த அணியும் நிர்ணயித்ததில்லை. 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தாலே வெற்றிக்கு வாய்ப்புள்ளது என்ற நிலைமை தான் உள்ளது.

எதிரணி போரட்டம்

எதிரணி போரட்டம்

ஆனால் தென்னாப்பிரிக்காவை அப்படியும் எடை போட முடியாது. நியூலாண்ட்ஸ் மைதானத்தில் 236 ரன்கள் தான் அதிகபட்சமாக விரட்டப்பட்ட இலக்காகும். அதுவும் 2 முறை மட்டுமே 200+ ரன்களுக்கு மேல் இலக்குகள் விரட்டப்பட்டுள்ளன. அதுவும் தென்னாப்பிரிக்க அணி மட்டுமே செய்துள்ளது. கடைசியாக 2011ல் தான் தென்னாப்பிரிக்கா இங்கு 200+ ரன்களை விரட்டியுள்ளது. எனவே இதுதான் இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக அமையும்.

இந்திய அணி ப்ளான்

இந்திய அணி ப்ளான்

இந்திய அணி 3வது நாள் முடிவு வரை 57 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மீண்டும் அரைசதம் போட்டால் இந்தியாவின் ஸ்கோர் ஓரளவிற்கு 200 ரன்களுக்கு அருகில் சென்றுவிடும். அதன்பின்னர் வரும் வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினால் கூட இந்திய அணியால் 250+ ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க முடியும். இது மிகவும் கடினமான இலக்காக அமையலாம். எனவே அதற்காக கடுமையான பேச்சுவார்த்தைகள் அணிக்குள் ஏற்கனவே நடந்திருக்கலாம்.

IND vs SA 3rd Test-ல் Virat Kohli செய்த விஷயம்.. உற்சாகமான Indian Players
பவுலிங்

பவுலிங்

முதல் 2 நாட்களில் இல்லாத வகையில் நேற்று பந்தில் நல்ல ஸ்விங் இருந்தது. புதிய பந்துகளே நன்கு ஸ்விங் ஆவதை உணர முடிவதாக ஜஸ்பிரித் பும்ரா கூறியிருந்தார். அவர் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டஃப் கொடுக்க நிச்சயம் தென்னாப்பிரிக்க பவுலர்களும் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
How much lead that India have to set against SA for win the capetown test
Story first published: Thursday, January 13, 2022, 15:30 [IST]
Other articles published on Jan 13, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X