For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது டெஸ்டில் சீண்டிய ரபாடா.. 3 வருடமாக மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்த விராட் கோலி.. தரமான பதிலடி

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் போது ரபாடா கொடுத்த திடீர் ஷாக் சம்பவத்திற்கு கேப்டன் விராட் கோலி தனது முக்கிய ஆயுதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

Kohli’s Incredible six off Rabada in Cape Town | IND vs SA 3rd Test | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஆனால் பெரியளவில் சோபிக்கவில்லை.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் நடையை கட்டினர். இதனையடுத்து களமிறங்கிய புஜாரா - விராட் கோலி ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஒருபுறம் புஜாரா வேகமாக ரன்களை உயர்த்த மறுமுணையில் விராட் கோலி தூண் போன்று நின்று பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

 கோலியின் நிதானம்

கோலியின் நிதானம்

அதிகமான பந்துகளை எதிர்கொண்ட போதும், விராட் கோலி களத்தின் தன்மையை உணர மெதுவாக ரன் சேர்த்தார். ஒருகட்டத்தில் புஜாரா 43 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க விராட் கோலியின் மீது முழு பொறுப்பு இரங்கியது. ஆனால் அவரி பொறுமையை மிகவும் சோதித்து பார்த்தார் ககிஸ்கோ ரபாடா. அப்படி பொறுமையாக இருந்த அவர் ஒருகட்டத்தில் கடும் பதிலடி கொடுத்தார்.

பயம் காட்டிடான் பரமா

பயம் காட்டிடான் பரமா

ஆட்டத்தின் 41வது ஓவரில் ரபாடா வீசிய முதல் பந்திலேயே விராட் கோலி அவுட்டாகியிருப்பார். அவுட் சைட் எட்ஜாக சென்ற அந்த பந்து கோலியின் பேட்டிற்கு மிகவும் நெருக்கமாக சென்றது. எனினும் பந்து பேட்டில் படாததால் தப்பித்தார். "பயத்தை காட்டிடான் பரமா" என்பது போல கோலிக்கு சற்று பதற்றம் ஏற்பட்டது.

கிளாசிக் பதிலடி

கிளாசிக் பதிலடி

இந்நிலையில் அதற்கு அடுத்த பந்திலேயே கோலி தரமான பதிலடி கொடுத்தார். ரபாடா போட்ட ஷார்ட் பந்தை விராட் கோலி திடீரென தூக்கி அடித்தார். இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்து சிக்ஸருக்கு பறந்தது. மிகவும் நிதானமாக இருந்த கோலி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினார்.

 3 வருட காத்திருப்பு

3 வருட காத்திருப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கடந்த 3 வருடங்களாக ஒரு சிக்ஸரை கூட அடித்ததில்லை. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் சிக்ஸர் அடித்த அவர், தற்போது தனது கிளாசிக் கம்பேக் மூலம் சிக்ஸர் விளாசியுள்ளார். இதனால் அவரின் அந்த ஷாட்டை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, January 11, 2022, 20:03 [IST]
Other articles published on Jan 11, 2022
English summary
Virat kohli gives a strong reply to rabada, after his ball beats the skipper inIndia vs south africa 3rd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X