For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வரலாறு படைக்குமா இந்திய அணி?” 3வது டெஸ்ட்-ன் பிட்ச், வானிலை, ப்ளேயிங் 11, ரெக்கார்ட் - விவரங்கள்

கேப்டவுன்: இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றை மாற்றி அமைக்கக்கூடிய, 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

Recommended Video

India vs South Africa 3rd Test Pitch Report

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமனில் உள்ள நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று கேப்டவுனில் உள்ள நியூலாந்து மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் விராட் கோலி தனது கேப்டன்சி பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார்.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

அதாவது இந்திய அணியால் இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாத அயல்நாட்டு மண்ணாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது. இதற்கு முன்னர் பல முன்னணி வீரர்கள் விளையாடிய போதும், வெற்றி கண்டதில்லை. எனவே இதில் வெற்றி பெற்றுவிட்டால் கேப்டன் விராட் கோலிக்கு மற்றொரு மகுடமாக விளங்கப்போகிறது.

ப்ளேயிங் 11 மாற்றங்கள்

ப்ளேயிங் 11 மாற்றங்கள்

2வது டெஸ்ட் போட்டியில் காயத்தால் வெளியேறிய விராட் கோலி, இப்போட்டியில் முழு உடற்தகுதியுடன் திரும்பவுள்ளார். ஆனால் இந்திய அணிக்கு தற்போது இருக்கும் ஒரே பிரச்சினை முகமது சிராஜ் காயத்தால் வெளியேறியுள்ளது தான். அவருக்கு மாற்றாக சீனியர் பவுலர் இஷாந்த் சர்மாவை கொண்டு வர கோலி - டிராவிட் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

வானிலை

வானிலை

இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ரசிகர்களால் முழு ஆட்டத்தையும் காண முடியும் எனத்தெரிகிறது. கேப்டவுன் நகரத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் குறைவு தான். போட்டி தொடங்கும் இன்றைய நாளில் மட்டும் மேக மூட்டங்கள் இருக்கும் என்றும் ஆனால் மழைக்கான வாய்ப்பு 20% தான் எனக்கூறப்படுகிறது. எனினும் 5 நாட்களிலும் பலத்த காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

நியூலாந்து மைதானத்தை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் உதவக்கூடிய பிட்ச் ஆகும். இங்கு அதிகப்படியான பவுன்சர்களும், வேகமும் இருக்கும். இதே போல தென்னாப்பிரிக்க நாட்டிலேயே ஸ்பின்னர்களும் சோபிக்கக்கூடிய பிட்ச் என்றால் நியூலாந்து மைதானமாக தான் இருக்கிறது. கடந்த 2 போட்டியை போன்று இல்லாமல் இங்கு ஸ்பின்னர்களும் அதிக விக்கெட்டுகளை எடுக்கலாம். பேட்டிங்கை பொறுத்தவரையில் அவுட் ஃபீல்ட் எனப்படும், மைதானத்தின் பிற பகுதிகள் ஈரப்பதம் இன்றி நன்கு வறண்டு இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து ஷாட் அடித்தால் எந்தவித தடையும் இன்றி உடனடியாக பவுண்டரிகள் குவியும்.

வெற்றி பெற டிப்ஸ்

வெற்றி பெற டிப்ஸ்

கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது. இந்த 5 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட இந்தியாவால் பெற முடியவில்லை. 3 போட்டிகள் தோல்வியும், 2 போட்டிகள் சமனிலும் முடிவடைந்துள்ளது. இந்தியா இங்கு சொதப்புவதற்கான முக்கிய காரணம் 2 இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் ஆர்டர் சொதப்புவது தான். எனவே இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களை நிதானமாக விளையாட கோலி அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, January 11, 2022, 11:30 [IST]
Other articles published on Jan 11, 2022
English summary
over view India vs South africa 3rd test match, capetown pitch, weather, Stats full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X