
எல்கரின் ரிவ்யூவ்
இந்த முடிவை எதிர்த்து எல்கர் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் எடுத்தார். அதில் பந்து ஸ்டம்பிற்கு மேல் நன்றாக பவுன்சாகி விட்டதாக கூறி நாட் அவுட் கொடுக்கப்பட்டது. எப்படி குட் லெந்தில் போடப்பட்ட பந்து பவுன்சாகும் என கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் கடும் ஆத்திரமடைந்தனர். இதன் வெளிப்பாடாக ஸ்டம்ப் மைக்கிற்கு அருகில் சென்ற அஸ்வின், " போட்டியில் வெற்றி பெற வேறு நல்ல வழிகளை பார்க்கலாம் எனக்கூறினார்."

கோலியின் கண்டனம்
விராட் கோலி ஒருபடி மேல் சென்று, "உங்கள் அணியினரும் ( தென்னாப்பிரிக்கா) அவ்வபோது பந்தை சேதப்படுத்துகின்றனர்.. அதையும் பாருங்கள்.. எதிரணியை மட்டுமே எப்போதும் பார்க்க வேண்டாம்.. எப்போதும் அனைத்து இடங்களையும் நியாயமாக பார்வையிடுங்கள்" கடுமையாக கூறினார். இந்திய அணி வீரர்களும் 3வது நடுவர் குளறுபடி நடந்ததாக அதிருப்தியில் இருந்தனர்.

சூப்பர் ஸ்போர்ட்ஸ் விளக்கம்
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தென்னாப்பிரிக்காவின் ஒளிபரபரப்பு நிறுவனமான சூப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் எல்கருக்கு எதிராக அஸ்வின் வீசிய அந்த சர்ச்சை பந்தின் பால் டிராக்கிங் வீடியோ காண்பிக்கப்பட்டுள்ளது. இதே போல அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் பந்து எப்படி பவுன்சானது என்ற காட்சியும் காண்பிக்கப்பட்டுள்ளது.

என்ன முடிவு
அதாவது அஸ்வின் வீசிய அந்த 2 ஓவர்களிலுமே பந்து நன்கு பவுன்சானது தான் உண்மை என அந்நிறுவனம் விளக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க விராட் கோலியின் செயலுக்கு ஏற்கனவே முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோலி பக்குவமே இல்லாமல் செயல்படாமல் கம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.