“வேண்டுமென்றே செய்யாதீர்கள்”.. விராட் கோலி - கள நடுவர் இடையே சண்டை.. ஷமி தான் காரணம் - என்ன ஆனது!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டின் போது அம்பயரின் முடிவில் அதிருப்தியடைந்த விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Kohli’s Incredible six off Rabada in Cape Town | IND vs SA 3rd Test | OneIndia Tamil

இந்த 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இயல்பான குணத்தை காண முடியவில்லை என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருந்தனர். ஏனென்றால் அவரின் பேட்டிங்கில் அவ்வளவு நிதானம் இருந்தது.

ஆனால் ஃபீல்டிங்கின் போது, தனது ஆக்ரோஷம் என்றுமே அடங்காது என்பது போல நடுவரிடம் தனது வேலையை காட்டியுள்ளார்.

“வரலாறு படைக்குமா இந்திய அணி?” 3வது டெஸ்ட்-ன் பிட்ச், வானிலை, ப்ளேயிங் 11, ரெக்கார்ட் - விவரங்கள்“வரலாறு படைக்குமா இந்திய அணி?” 3வது டெஸ்ட்-ன் பிட்ச், வானிலை, ப்ளேயிங் 11, ரெக்கார்ட் - விவரங்கள்

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

ஆட்டத்தின் 2ம் நாளான இன்று ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுடன் தொடங்கி வைத்தார். அவரின் பவுலிங்கில் தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் சரிந்தது. ஆனால் மற்றொரு புறம் முகமது ஷமிக்கு ஆட்டத்தின் தொடக்கமே சிக்கலாக அமைந்தது. இன்று அவர் ஆரம்பத்தில் வீசிய அனைத்து பந்துகளிலும் தனது கால்களை ‘டேஞ்சர் சோன்' பகுதியில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதாவது, ஸ்டம்பிற்கு நேராக இருக்கும் மைய பகுதியை தான் டேஞ்சர் சோன் என்றழைப்பார்கள்.

தொடர் எச்சரிக்கைகள்

தொடர் எச்சரிக்கைகள்

முகமது ஷமியின் இந்த தவறை பார்த்த கள நடுவர் எராஸ்மஸ் உடனடியாக முகமது ஷமியை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். 2 முறை இதே போன்று ஷமியை அழைத்து எச்சரிக்கை கொடுத்ததால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதிருப்தியடைந்தார். நேராக அம்பயரிடம் சென்று ஷமி என்ன தவறு செய்துவிட்டார் என்பது போல வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் உண்மையில் முகமது ஷமி மீது தான் தவறு உள்ளது. கள நடுவர் எராஸ்மஸ் எச்சரிக்கை விடுப்பதற்கு முன்னதாகவே 3 முறை முகமது ஷமி அந்த மைய பகுதியில் காலை வைத்திருந்தது வீடியோவில் தெரியவந்துள்ளது. இதனால் நடுவர் சரியான முடிவை கொடுத்த போதும், கோலி அதனை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்த போட்டியும் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக செல்கிறது. முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை அடித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் விக்கெட் டுகளை எடுப்பதில் சிரமப்பட்டு வருகிறது. அந்த அணி 45 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் பீட்டர்சன் மற்றும் ராஷீ வான் டர் டுசென் இணைந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli arugument with umpire erasmus after shami landed in danger zone at India vs south africa 3rd test
Story first published: Wednesday, January 12, 2022, 18:01 [IST]
Other articles published on Jan 12, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X