For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஓய்ய்..பசங்களா அத செஞ்சுருங்க” திடீரென கோலி போட்ட கூச்சல்.. டக் அவுட்டில் சுவாரஸ்ய நிகழ்வு- வீடியோ

கேப்டவுன்: விராட் கோலியின் ஒற்றை வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்திய அணி டக் அவுட்டில் நடந்த அறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Recommended Video

IND vs SA 3rd Test-ல் Virat Kohli செய்த விஷயம்.. உற்சாகமான Indian Players

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பின் தங்கியிருந்த இந்தியா, கோலி மற்றும் பும்ராவின் மாஸ்டர் ப்ளானால் அதிரடி கம்பேக் கொடுத்தது.

கோலி புதிய சாதனை..! டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம்..!! ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்..!!கோலி புதிய சாதனை..! டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம்..!! ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்..!!

விராட்டின் கொண்டாட்டம்

விராட்டின் கொண்டாட்டம்

உலகில் விராட் கோலியை போன்று எந்தவொரு வீரராலும் எதிரணி விக்கெட்களை அவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது. பந்துவீச்சாளர்களே அமையாத சென்றாலும், கோலியின் கொண்டாட்டம் மட்டும் பெரிய அளவில் இருக்கும். அந்தவகையில் தான் நேற்று நடந்த போட்டியின் போதும் கைத்தட்டும் விஷயத்தில் விராட் கோலி சுவாரஸ்ய முயற்சி ஒன்றை செய்துள்ளார். இது அணி வீரர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

2ம் நாள் ஆட்டமான நேற்று தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. டெம்பா பவுமா மற்றும் கீகன் பீட்டர்சன் ஜோடி தான் நீண்ட நேரமாக தலைவலி கொடுத்து வந்தனர். ஆனால் முகமது ஷமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி அசத்தல் கம்பேக் கொடுத்திருந்தது.

கோலியின் முயற்சி

கோலியின் முயற்சி

விக்கெட்டுகள் சரிந்த போதும் எந்தவித சத்தங்களும் இன்றி அமைதியான சூழல் நிலவி வந்தது. இதனால் உடனடியாக டக் அவுட்டை நோக்கி சென்ற விராட் கோலி, அங்கிருந்த வீரர்களிடம் தொடர்ந்து கைத்தட்டுங்கள் என சத்தமிட்டார். இதனால் உற்சாகமடைந்த இந்திய வீரர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக ஒரே மாதிரி கைத்தட்டல்களை கொடுத்தனர். இதனை பார்த்த முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கொரோனா பரவல் காரணமாக மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் கோஷங்களை கேட்காமல் வீரர்கள் சோர்வடைவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. எனவே ஒரு கேப்டனாக விராட் கோலி அதற்கு எடுத்திருக்கும் முயற்சி இனி அனைத்து அணிகளிலும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 13, 2022, 13:35 [IST]
Other articles published on Jan 13, 2022
English summary
Virat kohli takes a different effort to boosts team atmosphere, asking the dugout to cheer for them in India vs south africa 3rd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X