For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வீரர்களால் இந்தியாவுக்கு கண்டம்.. உம்ரான் மாலிக்கிற்கு துரோகம் செய்த டிராவிட்..ரசிகர்கள் அதிருப்தி

ராஜ்காட்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராஜ்காட்டில் நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தென்னாப்பிரிக்க அணி இன்றைய போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.

கடைசி நேரத்தில் இப்படியா..? 2 வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மாற்றம்! கடைசி நேரத்தில் இப்படியா..? 2 வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

டி காக் வாய்ப்பு

டி காக் வாய்ப்பு

தென்னாப்பிரிக்க அணியில் இன்றைய ஆட்டத்தில் 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி 2 போட்டியில் விளையாடாத குயின்டன் டி காக், தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று யான்சென் மற்றும் லுங்கி நிகிடி பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பைக்கு தயாராக செய்தி முயற்சியை கூட இந்திய அணி செய்யவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக்கிற்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை. கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த 2 போட்டியில் சொதப்பியதால் அவர் இன்றைய ஆட்டத்தில் ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.

தொடர்ந்து 4வது முறை

தொடர்ந்து 4வது முறை

ராஜ்காட் மைதானம், ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இங்கு இந்திய அணி இதுவரை 3 டி20 போட்டியில் விளையாடியுள்ளது இதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. மைதானம் கொஞ்சம் பெரியது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை தூக்கி அடிக்க நினைக்கும் பேட்ஸ்மேன்கள் கேட்ச்சாக வாய்பபுள்ளது. இதனால் செஸிங் சவாலாக இருக்கும். ஆனால் தொடர்ந்து 4வது முறையாக ரிஷப் பண்ட் டாஸை இழக்க, இந்தியா முதலில் பந்துவீசுகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்/ உம்ரான் மாலிக்

தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக் , 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. கிளாசன் . 6. லுங்கி நிகிடி 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. யான்சென் 11. நோக்கியா

Story first published: Friday, June 17, 2022, 19:14 [IST]
Other articles published on Jun 17, 2022
English summary
India vs south Africa 4th t20 preview and playing condition – Weather – pitch report IND VS SA 4வது டி20 போட்டி..ராஜ்காட்டில் ரன் மழை உறுதி.. பிளேயிங் XI- 3 மாற்றம் செய்த தென்னாப்பிரிக்கா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X