“கடைசி நேரத்தில் வந்த பிரச்சினை..” 5வது டி20 கிரிக்கெட் போட்டி.. ரிஷப் பண்ட் இதை செய்தே ஆக வேண்டும்

பெங்களூரு: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டது.

இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற, கடைசி டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

 இந்திய அணிக்கு வந்த கண்டம்.. 4வது டி20ல் தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த அசுர பலம்.. தப்பிப்பது கடினம்! இந்திய அணிக்கு வந்த கண்டம்.. 4வது டி20ல் தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த அசுர பலம்.. தப்பிப்பது கடினம்!

5வது டி20 போட்டி

5வது டி20 போட்டி

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு வித்தியாசமாக தான் அமைந்துள்ளது. முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியும், அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றியையும் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த 4 போட்டிகளிலுமே ஒரே ப்ளேயிங் 11 உடன் தான் களமிறங்கியுள்ளது.

புது சிக்கல்

புது சிக்கல்

இந்நிலையில் 5வது டி20ல் இந்திய அணிக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. அதாவது கடந்த 4 போட்டிகளிலுமே டாஸில் தோல்வியடைந்த ரிஷப் பண்ட், இன்று நிச்சயம் டாஸ் வெல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு காரணம் பிட்ச்-ல் ஏற்படப்போகும் திடீர் மாற்றம் தான். போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

பெங்களூரு மைதானத்தில் வழக்கமாக அதிக ஸ்கோர் ஆட்டமாக தான் இருக்கும். இங்கு முதலில் பந்துவீசும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். அதுவும் இன்று மாலை பெங்களூரு நகரத்தில் நல்ல மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது. பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கலாம்.

 ஸ்கோர்களின் விவரம்

ஸ்கோர்களின் விவரம்

இங்கு சராசரியாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 முதல் 160 ரன்கள் வரை தான் சேர்க்கிறது. 2வதாக பேட்டிங் செய்யும் அணியால் 190+ ரன்கள் என்ற இலக்கை கூட விரட்ட முடியும். எனவே ரிஷப் பண்ட் இன்று எப்படியாவது டாஸை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs south africa 5th t20 match pitch report ( இந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது டி20 போட்டி ) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது.
Story first published: Sunday, June 19, 2022, 17:00 [IST]
Other articles published on Jun 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X