For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நியாயமே இல்லாம நடந்துக்குறாங்க” இளம் வீரரை புறக்கணித்த இந்திய அணி.. விளாசிய ஆகாஷ் சோப்ரா!

மும்பை: இந்திய அணியில் இருந்து நியாயமே இல்லாமல் ஒரு சிறந்த வீரர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

3வது போட்டியிலாவது வெற்றி பெற்று, நம்பிக்கையுடன் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணி மாற்றங்கள்

இந்திய அணி மாற்றங்கள்

இதற்காக இன்று தொடங்கிய 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஸ்வின், ஷர்துல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குவியும் கண்டனம்

குவியும் கண்டனம்

இந்நிலையில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டதில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார். வெங்கடேஷ் ஐயர், முழு உடற்தகுதியுடன் உள்ளார். நிராகரிப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. இருப்பினும் அவர் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 அர்த்தமற்ற மாற்றம்

அர்த்தமற்ற மாற்றம்

2 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதிலும் ஒரே ஒரு முறை மட்டுமே பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு போட்டியில் அவரின் ஆட்டத்தை பார்த்து எதனை வைத்து அவரை நீக்கினார்கள். இது ஏற்றுக்கொள்ளவே முடியாது. அர்த்தமற்ற செயலாக மீண்டும் 5 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

 காரணம் என்ன

காரணம் என்ன

முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங் செய்யாத வெங்கடேஷ் ஐயர், 2வது போட்டியில் 5 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 28 ரன்களை விட்டுகொடுத்தார். பேட்டிங்கில் 2, 22 என்ற ரன்களை அடித்தார். இதனால் அவரை நீக்கிவிட்டு மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல ருதுராஜ் vவாய்ப்பு கொடுக்கப்படாததற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Story first published: Sunday, January 23, 2022, 19:16 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
Former Cricketer Aakash Chopra gets upset after Team India dropping promising youngster for 3rd ODI against South africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X