For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“மிதப்பிலேயே சுத்துனா எப்படி?” இந்திய அணியின் சொதப்பலுக்கான காரணம்..விட்டு விளாசிய கவுதம் கம்பீர் !

மும்பை: இந்திய அணி தொடர்ந்து தோல்வியடைவதற்கு காரணம் அவர்கள், மிதப்புடன் சுற்றுவது தான் என கம்பீர் விளாசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.

2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை அளித்த போதும் அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தொடரை கைவிட்டது.

மோசமான தோல்விகள்

மோசமான தோல்விகள்

டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு மோசமான சூழல் தான் நிலவியது. முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் 288 ரன்களை கூட கட்டுப்படுத்த முடியாமல் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரும் இந்திய அணியின் கையை விட்டு சென்றது.

கம்பீரின் விளக்கம்

கம்பீரின் விளக்கம்

இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி தன்னிடம் உள்ள பெருமைகளை, கௌரவங்களை மனதில் வைத்துக்கொண்டே ஆடினால் எப்படி வெற்றி பெறுவார்கள். இதில் இருந்து அவர்கள் முதலில் வெளியே வர வேண்டும்.

பெருமைகள்

பெருமைகள்

கிரிக்கெட் ஒன்றும் கௌரவத்திற்காகவே விளையாடும் விளையாட்டு அல்ல. இந்தியாவின் டாப் 5 வீரர்கள் ( மிடில் ஆர்டர் ) மிகவும் பலமானது, அனுபவமானது என பலரும் கூறுவார்கள். புள்ளிவிவரங்களும் அதையே கூறுகின்றன. ஆனால் வெறும் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மிதப்பில் சுற்றாமல், தினம் தினம் அவர்கள் எப்படி விளையாடுகின்றனரோ அதை பொறுத்துதான் ஆட்டத்தின் முடிவுகள் இருக்கும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. தொடர்களை கைவிட்டாலும், சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்று, ஒரு புத்துணர்ச்சியுடன் நாடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Sunday, January 23, 2022, 17:21 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
Former Cricketer Gautam Gambhir list out the valuable reasons for team India's poor performance against south africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X