“புஜாரா - ரகானேவின் இடம் உறுதி”.. 3வது டெஸ்ட் குறித்து கே.எல்.ராகுல் தகவல்.. இளம் வீரர் சோகம்!

ஜோகசன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2 சீனியர் வீரர்கள் விளையாடுவார்கள் என்பது கே.எல்.ராகுலால் தெரியவந்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இதனால் கேப்டவுனில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்போட்டியில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்றும். முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவும், தங்களது பெருமைகளை காப்பாற்றி கொள்ள தென்னாப்பிரிக்காவும் முணைப்பு காட்டி வருகிறது.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இது ஒருபுறம் இருக்க, அடுத்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விமர்சனங்களில் சிக்கியிருந்த சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். கடந்த டெஸ்டில் இருவரும் அரைசதம் அடித்ததால், அவர் விஷயத்தில் கோலி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராகுலின் விளக்கம்

ராகுலின் விளக்கம்

இந்நிலையில் அதுகுறித்து துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். புஜாரா மற்றும் ரகானே இருவருமே எங்கள் அணியின் மிகச்சிறந்த வீரர்கள். கடந்த பல வருடங்களாக அவர்கள் இந்திய அணிக்காக மிகப் பெரும் இன்னிங்ஸை கொடுத்துள்ளனர். இப்போதும் அவர்கள் எங்கள் அணியின் சிறந்த வீரர்கள் தான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுவார்கள். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த போட்டியை விட அடுத்த போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று ராகுல் கூறியுள்ளார்.

சோகத்தில் இளம் வீரர்

சோகத்தில் இளம் வீரர்

கே.எல்.ராகுலின் இந்த கருத்து மூலம் புஜாரா - ரகானே நிச்சயம் அடுத்த போட்டியில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. அப்படி ஒருவேளை அவர்கள் இடம்பெற்றால் ஹனுமா விஹாரி வெளியேற்றப்படுவார். மேலும் 3வது டெஸ்டிலாவது வாய்ப்பு கிடைக்குமா என காத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஏமாற்றத்தை சந்திப்பார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KL rahul gives a hint on Team India playing 11 for 3rd test against South africa
Story first published: Friday, January 7, 2022, 20:21 [IST]
Other articles published on Jan 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X