For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு இடத்திற்கு அடித்துக்கொள்ளும் 4 வீரர்கள்.. இந்திய ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதியன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்வதில் மட்டும் தான் குழப்பம் நீடிக்கிறது.

மளிகை கடைக்காரர் மகன் இன்று இந்திய அணியில்..தந்தையின் தியாகத்தால் வளர்ந்த கதை.. நெகிழ்ந்த ரசிகர்கள் மளிகை கடைக்காரர் மகன் இன்று இந்திய அணியில்..தந்தையின் தியாகத்தால் வளர்ந்த கதை.. நெகிழ்ந்த ரசிகர்கள்

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா விலகியதால், ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா களமிறங்குகிறார். அதன்பின்னர் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். ஆனால் 5வது பேட்ஸ்மேன் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ரகானே vs ஸ்ரேயாஸ்

ரகானே vs ஸ்ரேயாஸ்

இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, அஜிங்கியா ரகானே என மூன்று பேர் அந்த இடத்திற்கு போட்டியிட்டு வருகின்றனர். சீனியர் வீரர் ரகானே அயல்நாட்டு களங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவருக்கு இந்த தொடர் தான் கடைசி வாய்ப்பு என்பதால் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார். மற்றொரு புறம் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து தொடரில் கெத்து காட்டினார். ரகானேவுக்கு மாற்றாக களமிறங்கி சதம் மற்றும் அரைசதம் அடித்ததால், அவருக்கு அயல்நாட்டு களத்திலும் வாய்ப்பு கொடுக்கலாம் எனத்தெரிகிறது.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

இதே போல ஹனுமா விஹாரி முக்கிய வீரராக இருக்கிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படும் விஹாரிக்கு ஏன் வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற அழுத்தம் உள்ளது. இவருக்கு கூடுதல் பலம் என்னவென்றால் இந்திய ஏ அணிகாக கடந்த ஒரு மாதமாக தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் விளையாடியது தான். அந்த தொடரில் 54, 72, 63 என மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார். இதனால் அவருக்கு செஞ்சூரியன் களத்தை பற்றி நன்கு தெரியும்.

Recommended Video

India Playing 11 vs SA: Race Between Ishant and Siraj | OneIndia Tamil
ஷர்துல் இடத்திற்கு சிக்கல்

ஷர்துல் இடத்திற்கு சிக்கல்

ஒருவேளை இவர்களில் யாரேனும் ஒருவரை கூடுதலாக எடுத்தால், ஷர்துல் தாக்கூரின் இடத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாட திட்டமிட்டுள்ளது. அதில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் செயல்படவுள்ளார். இதனால் இந்திய அணிக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கூடுதல் பலமும் கிடைக்கும். ஒருவேளை இவரை நீக்கிவிட்டு, முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்கலாம்.

Story first published: Tuesday, December 21, 2021, 19:20 [IST]
Other articles published on Dec 21, 2021
English summary
four players fight for one place, BCCI in Confusion of Selecting Team india playing 11 for India vs South africa test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X