For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, சச்சின், யுவராஜ் யாரையும் மிஸ் பண்ணாதீங்க! 2011 உலகக்கோப்பை பைனல் முழு மேட்ச் இன்று ஒளிபரப்பு

மும்பை : இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றி ஒன்பது வருடம் நிறைவைடைகிறது.

Recommended Video

கம்பீர் போட்ட ட்வீட்... கோபப்பட்ட தோனி ரசிகர்கள்

இந்த நிலையில், அந்த இறுதிப் போட்டியை இன்று மீண்டும் ஒளிபரப்ப உள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். (அது குறித்த தகவல் கடைசியில் உள்ளது.)

கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் உலகில் நடைபெறவில்லை.

இப்படி ஒரு நாள் கிடைத்தால்..

இப்படி ஒரு நாள் கிடைத்தால்..

இந்த நிலையில், கிரிக்கெட் ஒளிபரப்பும் சேனல்கள் திக்கித் திணறி வருகின்றன. பழைய போட்டிகளை போட்டு சமாளித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி வந்தால் விடுவார்களா? அது தான் இந்த மறு ஒளிபரப்பிற்கு காரணம்.

கேப்டன் தோனி

கேப்டன் தோனி

2011, ஏப்ரல் 2 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. 2007 டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த தோனி தலைமையில் இந்தியா ஆடும் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் என்ற பரபரப்பு ஒருபுறம்.

சச்சின் நிலை

சச்சின் நிலை

சச்சின் தன் வாழ்நாளில் இந்திய அணிக்கு ஒருமுறையாவது உலகக்கோப்பை வென்று கொடுத்து விட வேண்டும் என ஏக்கத்தில் இருந்தது ஒருபுறம். அதுவும் இறுதிப் போட்டி அவரது சொந்த ஊரான மும்பையில், அவருக்கு பழக்கமான வான்கடே மைதானத்தில் என்றால் எப்படி இருக்கும்?

யுவராஜ் சிங் பார்ம்

யுவராஜ் சிங் பார்ம்

யுவராஜ் சிங் தன் வாழ்நாளில் உச்சகட்ட பார்மில் இருந்தது அந்த நேரத்தில் தான். அதிரடி பேட்டிங், நேர்த்தியான பினிஷிங், பந்துவீச்சிலும் கலக்கல் என அபாரமாக செயல்பட்டு வந்தார். ஒருவேளை சச்சின், தோனி ஏமாற்றினாலும், யுவராஜ் சிங் தனி ஆளாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுப்பார் என அந்த நேரத்தில் ரசிகர்கள் நம்பினார்கள்.

மறக்க முடியாத நினைவுகள்

மறக்க முடியாத நினைவுகள்

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அந்தப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியின் முடிவில் தோனி கடைசி ரன்னை எட்ட சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது. சச்சினை இந்திய வீரர்கள் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்த காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.

லாக்டவுன் கட்டுப்பாடு

லாக்டவுன் கட்டுப்பாடு

தற்போது இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. பலரும் டிவி, ஸ்மார்ட்போன் வைத்து தான் பொழுதை கழித்து வருகிறார்கள்.

ஐபிஎல் இல்லை

ஐபிஎல் இல்லை

மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் நடக்குமா? என தெரியாத நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சி பழைய போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது.

நாள், நேரம் இதுதான்

நாள், நேரம் இதுதான்

இந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா உலகக்கோப்பை வென்று 9 ஆண்டுகள் ஆவதை நினைவு கூர்ந்து இந்தியா - இலங்கை உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. இன்று (ஏப்ரல் 2) அன்று மதியம் 2 மணிக்கு இந்த இறுதிப் போட்டியை முழுதாக காணலாம். எந்த சேனல்களில்?

டிவி சேனல்கள் பெயர்கள்

டிவி சேனல்கள் பெயர்கள்

டிவி சேனல்கள் - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் ஆகிய சேனல்களில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணலாம்.

ஸ்ட்ரீமிங் இல்லை

ஸ்ட்ரீமிங் இல்லை

ஒன்பது ஆண்டுகள் முன்பு செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வர்ணனை மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது. இணையம் மற்றும் ஆப் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங் மூலம் இந்தப் போட்டியை காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 2, 2020, 11:41 [IST]
Other articles published on Apr 2, 2020
English summary
India vs Sri Lanka 2011 World cup final match re-telecast in Star Sports today to celebrate 9th year of India’s world cup victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X