For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டம் முழுவதும் நிதானம்.. இந்திய வீரர்களின் புரியாத செயல்.. இலங்கைக்கு குறைவான இலக்கு - காரணம் என்ன

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி படு நிதானமாக ஆடியது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு கொழும்புவில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

 நிதான தொடக்கம்

நிதான தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல அடித்தளம் அமைந்தது. பார்ட்னர்ஷிப் அதிகரித்தாலும், அதிரடி மிகவும் குறைவாகவே காணப்பட்டது. தவான் - ருத்ராஜ் கெயிக்வாட் இருவருமே மிகவும் நிதனமாக ஆட் ரன் சேர்த்தனர். பவர் ப்ளேவில் 45 ரன்களையே சேர்த்தது.

ஸ்லோ ரன்ரேட்

ஸ்லோ ரன்ரேட்

சிறப்பாக ஆடி வந்த தவான் 42 பந்துகளில் 40 ரன்களை சேர்த்து அவுட்டானார். மற்றொரு ஓப்பனிங் வீரரான 21 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. தேவத் பட்டிக்கல் 29 ரன்களையும், சஞ்சு சாம்சன் 7 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 16.4 ஓவர்கள் ஆன போதும் 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 டார்கெட்

டார்கெட்

இதன் பின்னர் வந்த துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே விளையாடினர். 12 பந்துகளை சந்தித்த நிதிஷ் ராணா 9 ரன்களை எடுத்தார். புவனேஷ்வர் குமார் 11 பந்துகளை சந்தித்து 13 ரன்களை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை குவித்தது.

பொறுமையின் காரணம்

பொறுமையின் காரணம்

டி20 போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இப்படியா நிதானமாக விளையாடுவது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் பின் வரிசையில் அனுபவம் குறைந்த வீரர்கள் உள்ளனர். எனவே தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினால் ஒட்டுமொத்த விக்கெட்டும் சீட்டுக்கட்டை போன்று வேகமாக சரிந்துவிடும் என ராகுல் டிராவிட் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

Story first published: Wednesday, July 28, 2021, 21:51 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Team India Sets a target of 135 against srilanka in 2nd t20, Reason behind Slow runrate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X