கடைசி 2 ஓவரில் ட்விஸ்ட்.. ஒரே ஒரு வீரரால் இந்தியாவுக்கு வந்த தலைவலி.. 2வது டி20ல் ஜஸ்ட் மிஸ் தோல்வி!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி
4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Ind vs SL India அணி போராடி தோல்வி Srilanka won by 4 wickets

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு கொழும்புவில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

நிதான தொடக்கம்

நிதான தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல அடித்தளம் அமைந்தது. பார்ட்னர்ஷிப் அதிகரித்தாலும், அதிரடி மிகவும் குறைவாகவே காணப்பட்டது. தவான் ( 40), ருத்ராஜ் கெயிக்வாட் ( 21) முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. தேவத் பட்டிக்கல் 29 ரன்களையும், சஞ்சு சாம்சன் 7 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 16.4 ஓவர்கள் ஆன போதும் 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

டார்கெட்

டார்கெட்

இதன் பின்னர் வந்த துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே விளையாடினர். 12 பந்துகளை சந்தித்த நிதிஷ் ராணா 9 ரன்களை எடுத்தார். புவனேஷ்வர் குமார் 11 பந்துகளை சந்தித்து 13 ரன்களை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை குவித்தது.

தொடக்கமே தடுமாற்றம்

தொடக்கமே தடுமாற்றம்

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அவிஷிங்கா ஃபெர்னாண்டோ 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுணையில் ஆடிய மற்றொரு ஓப்பனிங் வீரர் மினோத் பனுக்கா 36 ரன்கள் எடுத்தார். ஆனால் இதன் பின்னர் வந்த சதீரா சமராவிக்ரமா (8), தசுன் சனக்கா (3) வானிண்டு ஹசரங்கா ( 15) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்

வெற்றி

வெற்றி

இதனால் இலங்கை அணி 105 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்றது. ஆனால் அந்த அணியின் தனஞ்ஜெய சில்வா முடிவை மாற்றி அமைத்தார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிரடி காட்டிய தனஞ்செயா (40*) வெற்றிக்கு உதவினார். இதனல் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1- 1 என சமநிலையில் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India Losses the 2nd t20 against Srilanka by 4 wickets, losses the series also.
Story first published: Thursday, July 29, 2021, 0:01 [IST]
Other articles published on Jul 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X