டாஸின் போதே சர்ஃபரைஸ்.. 4 புதுமுக வீரர்கள்.. ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றம் செய்த தவான்!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் இந்திய ஏ அணி, ஒரு நாள் போட்டி தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகளும் தற்போது மோதி வரும் டி20 தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வென்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

2வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஜுலை.27) உறுதி செய்யப்பட்டது. இதனால், நேற்றே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான், கிருஷ்ணப்பா கவுதம், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, யுவேந்திர சாஹல் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.

டாஸில் ஆச்சரியம்

டாஸில் ஆச்சரியம்

அதன்படி இன்று தொடங்கிய 2வது போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 அனைவருக்கும் ஆச்சரியமளித்தது. குவாரண்டைன் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வீரர்கள் யாரும் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் தவான் போட்டியில் கலந்துக்கொண்டார்.

 அறிமுக வீரர்கள்

அறிமுக வீரர்கள்

இதுமட்டுமல்லாமல் ருத்ராஜ் கெயிக்வாட், தேவ்தத் பட்டிக்கல், நிதிஷ் ராணா, சேட்டன் சக்காரியா ஆகியோருக்கு தங்களது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஓப்பனிங்கில் தவான் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட், முதல் விக்கெட்டிற்கு பட்டிக்கலும், மிடில் ஆர்டரில் நிதிஷ் ராணாவும் களமிறங்கவுள்ளனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

தவான், ருத்ராஜ் கெயிக்வாட், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India's Surprise in Playing 11 in 2nd t20 match against, Shikhar dhawan Re entry
Story first published: Wednesday, July 28, 2021, 21:06 [IST]
Other articles published on Jul 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X