For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேர ட்விஸ்ட்.. அச்சுறுத்தல் கொடுத்த இந்திய பவுலர்கள்.. 3வது போட்டியில் போராடி வென்ற இலங்கை!

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏற்கனவே 2 போட்டிகளில் வென்று தொடரை கைபற்றிய நிலையில் 3வது போட்டியிலும் வெற்றி பெறும் முணைப்புடன் களமிறங்கியுள்ளது.

இலங்கை அணி ஏற்கனவே பந்துவீச்சில் பலவீனமாக உள்ள நிலையில் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹசரங்கா காயம் காரணமாக 3வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

India Vs Srilanka 2nd ODI Live Cricket Score Updates in Tamil

Jul 23, 2021, 11:37 pm IST

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Jul 23, 2021, 11:36 pm IST

இலங்கைக்கு பீதியை கிளப்பிய இந்திய இளம் படை.. 3வது போட்டியில் கடும் போராட்டம்.. தொடரை வென்று அசத்தல்!

Jul 23, 2021, 11:36 pm IST

இலங்கை வெற்றி பெற 7 ரன்களே தேவைப்படும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து இந்திய பவுலர்கள் அசத்தல்.

Jul 23, 2021, 11:19 pm IST

கடைசி நேரத்தில் சரியும் இலங்கை விக்கெட்கள்.. அசத்தும் இந்திய பவுலர்கள்.. விறுவிறுப்படையும் போட்டி!

Jul 23, 2021, 10:20 pm IST

25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 151 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 76 ரன்கள் தேவை.

Jul 23, 2021, 9:43 pm IST

15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை.

Jul 23, 2021, 8:52 pm IST

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்களை எடுத்துள்ளது.

Jul 23, 2021, 8:09 pm IST

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி.

Jul 23, 2021, 7:50 pm IST

இந்தியாவுக்கு மீண்டும் காத்திருக்கிறதா ஓர் ஆச்சரியம்..8 விக்கெட்டில் ரன்களை குவிக்கும் இளம் வீரர்கள்

Jul 23, 2021, 7:47 pm IST

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. நவ்தீப் சைனி 11 ரன்களும் ராகுல் சஹார் 12 ரன்களும் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

Jul 23, 2021, 7:46 pm IST

36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்துள்ளது. நவ்தீப் சைனி - ராகுல் சஹார் நிதான ஆட்டம்.

Jul 23, 2021, 6:47 pm IST

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் அணியை மீட்க போராட்டம்.

Jul 23, 2021, 6:08 pm IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி மழையினால் பாதிப்பு. போட்டியின் ஓவர்கள் 47 ஆக குறைப்பு.

Jul 23, 2021, 5:03 pm IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீடு. 23 ஓவர்கள் முடிவில் இந்தியா 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Jul 23, 2021, 4:34 pm IST

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 127 ரன்களை எடுத்துள்ளது. சரிவில் இருந்து அணியை மீட்க மணிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதான ஆட்டம்.

Jul 23, 2021, 4:29 pm IST

இந்திய அணியில் 3வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 46 ரன்களுக்கு அவுட்டானார்.

Jul 23, 2021, 4:16 pm IST

இந்திய அணியில் 2 வது விக்கெட்டை சாய்த்தார் தசுன் சனகா. சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா 49 ரன்களுக்கு அவுட்டானார்.

Jul 23, 2021, 4:16 pm IST

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்தது. பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 32 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

Jul 23, 2021, 3:51 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்து நல்ல நிலையில் உள்ளது. பிரித்வி ஷா 29 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 18 ரன்களுடனும் சிறப்பாக ஆட்டம்.

Jul 23, 2021, 3:28 pm IST

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்களை எடுத்துள்ளது. இளம் வீரர்கள் சஞ்சு சாம்சன் 4 ரன்களும், ப்ரித்வி ஷா 17 ரன்களும் எடுத்து நிதான ஆட்டம்.

Jul 23, 2021, 3:28 pm IST

இந்திய அணியில் முதல் விக்கெட் வீழ்ந்தது. அதிரடியாக ஆடி வந்த கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

Jul 23, 2021, 2:52 pm IST

இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Jul 23, 2021, 2:52 pm IST

சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகியோர் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் காணுகின்றனர்.

Jul 23, 2021, 2:38 pm IST

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி. பேட்டிங்கை தேர்வு செய்தார் கேப்டன் ஷிகர் தவான்.

Jul 20, 2021, 11:24 pm IST

ஒற்றை ஆளாக இலங்கையை துவம்சம் செய்த தீபக் சஹார். 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. 2 -0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்.

Jul 20, 2021, 10:38 pm IST

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெறுவதற்காக தீபக் சாஹர் 22 ரன்களும், புவனேஷ்வர் குமார் 3 ரன்களுடனும் நிதான ஆட்டம். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 67 ரன்கள் தேவை.

Jul 20, 2021, 10:29 pm IST

37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 196 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 78 பந்துகளில் 80 ரன்கள் தேவை.

Jul 20, 2021, 9:43 pm IST

இந்திய அணியில் 6வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

Jul 20, 2021, 9:42 pm IST

அறிமுக போட்டியிலேயே தனது முதல் அரைசதத்தை விளாசினார் சூர்யகுமார் யாதவ். 42 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார்.

Jul 20, 2021, 9:39 pm IST

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டம்.

Jul 20, 2021, 8:50 pm IST

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் குவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 32 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Jul 20, 2021, 8:17 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவான் 28 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 13 ரன்களுடனும் இந்திய அணியை மீட்க போராட்டம்.

Jul 20, 2021, 7:51 pm IST

இந்திய அணி 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 13 ரன்களுக்கும், இஷான் கிஷான் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

Jul 20, 2021, 6:54 pm IST

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 275 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் சாமிக்கா கருணரத்னே அதிரடி காட்டி 44 ரன்கள் விளாசல். இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்காக நிர்ணயம்.

Jul 20, 2021, 6:25 pm IST

45 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் ரன்களை உயர்த்த சாரித் அசலங்கா அதிரடி ஆட்டம்.

Jul 20, 2021, 6:09 pm IST

40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 10 ஓவர்களில் ரன்களை உயர்த்த சாமிக்கா கருணராத்னே மற்றும் சாரித் போராட்டம்.

Jul 20, 2021, 5:59 pm IST

இலங்கை அணியில் 6 விக்கெட் சாயந்தது. நிதானமாக விளையாடி வந்த ஹசரங்காவை 8 ரன்களுக்கு வெளியேற்றினார் தீபக் சாஹர்

Jul 20, 2021, 5:39 pm IST

35 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் தசுன் சனகா 16 ரன்களும் சாரித் அசலங்கா 23 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Jul 20, 2021, 5:20 pm IST

30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம். கேப்டன் தசுன் சனகா 3 ரன்களும் சாரித் அசலங்கா 9 ரன்களும் எடுத்து அணியை மீட்க போராட்டம்.

Jul 20, 2021, 4:53 pm IST

இலங்கை அணியில் 3வது விக்கெட்டை சாய்த்தார் புவனேஷ்வர் குமார். தொடக்க வீரர் அவிஷிங்கா 50 ரன்களுக்கு கேட்ச்சானார். 25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்துள்ளது.

Jul 20, 2021, 4:52 pm IST

இலங்கை அணியின் ஓப்பனிங் வீரர் அவிஷிங்கா அரை சதம் கடந்தார். 70 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்கள் விளாசல்.

Jul 20, 2021, 4:40 pm IST

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. அவிஷிங்கா 39 ரன்களும் தனஞ்ஜெயா 11 ரன்களும் எடுத்து நிதான ஆட்டம்.

Jul 20, 2021, 4:13 pm IST

இலங்கை அணியில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்கள் வீழ்ந்தது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்து யுவேந்திர சாஹல் அசத்தல்.

Jul 20, 2021, 3:55 pm IST

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எடுத்துள்ளது.

Jul 20, 2021, 3:41 pm IST

50 ரன்களை கடந்தது இலங்கை அணி. தொடக்க வீரர்கள் மினோத் பனுக்கா 25 ரன்களும் அவிஷிங்கா 26 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம்.

Jul 20, 2021, 3:23 pm IST

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் மினோத் பனுக்கா 12 ரன்களும் அவிஷிங்கா 15 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம்.

Jul 20, 2021, 3:12 pm IST
Mykhel

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இலங்கை பேட்டிங் தேர்வு

Jul 18, 2021, 10:20 pm IST

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Jul 18, 2021, 10:20 pm IST

இலங்கை நிர்ணயித்த 263 ரன்கள் இலக்கை, 36.4வது ஓவரிலயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது இந்தியா

Jul 18, 2021, 10:20 pm IST

அதிகபட்சமாக கேப்டன் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்தார்

Jul 18, 2021, 9:45 pm IST

இந்திய அணியில் மூன்றாவது விக்கெட்டாக மனீஷ் பாண்டே அவுட் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த பாண்டே, தனஞ்செயா ஓவரில் அவுட் இந்திய அணி 30.4வது ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது

Jul 18, 2021, 9:20 pm IST

இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் அரைசதம் அடித்துள்ளார் தவான் இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது

Jul 18, 2021, 8:50 pm IST

அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் அவுட் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன், சண்டகன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது

Jul 18, 2021, 8:40 pm IST

அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷன் அதிரடி அரை சதம் - மிரட்டும் இந்திய அணி

Jul 18, 2021, 8:17 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரேயொரு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் குவித்துள்ளது

Jul 18, 2021, 8:17 pm IST

ப்ரித்வி ஷா அவுட்டான பிறகு களமிறங்கிய இஷான் கிஷனும் அதிரடியாக ஆடி வருகிறார்

Jul 18, 2021, 8:17 pm IST

10 ஓவர்கள் முடிவில் இஷான் 24 ரன்களுடனும், தவான் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Jul 18, 2021, 8:00 pm IST

ப்ரித்வி ஷா 43 ரன்களில் அவுட்

Jul 18, 2021, 8:00 pm IST

தனஞ்செயா ஓவரில் தூக்கி அடித்து அவிஷ்கா ஃபெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Jul 18, 2021, 7:59 pm IST

இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 68-1. ஒன் டவுன் வீரராக இஷான் கிஷன் களமிறங்கியுள்ளார்.

Jul 18, 2021, 7:50 pm IST

இந்திய அணி மிரட்டலான தொடக்கம்

Jul 18, 2021, 7:50 pm IST

முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவிப்பு

Jul 18, 2021, 7:50 pm IST

ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 43 விளாசியுள்ளார். இதில் 9 பவுண்டரிகள் அடக்கம்

Jul 18, 2021, 6:52 pm IST

இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்துள்ளது

Jul 18, 2021, 6:52 pm IST

புவனேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டது

Jul 18, 2021, 6:52 pm IST

இறுதிக் கட்டத்தில் கருணரத்னே 43 ரன்கள் எடுக்க, இலங்கை சிறப்பான ஸ்கோரை எட்டியது

Jul 18, 2021, 6:36 pm IST

ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிடைத்த முதல் விக்கெட்

Jul 18, 2021, 6:36 pm IST

இசுரு உடானா 8 ரன்களில் பாண்ட்யா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Jul 18, 2021, 6:36 pm IST

இலங்கை அணி 47 ஓவர்களில் 223 - 8

Jul 18, 2021, 6:22 pm IST

கடைசி நம்பிக்கை கொடுத்த இலங்கை கேப்டன் ஷானகா அவுட்

Jul 18, 2021, 6:21 pm IST

39 ரன்களில் சாஹல் ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Jul 18, 2021, 6:21 pm IST

45 ஓவர்கள் முடிவில், இலங்கை 210 - 7

Jul 18, 2021, 6:14 pm IST

200 ரன்களை எட்டிப்பிடித்த இலங்கை அணி

Jul 18, 2021, 6:14 pm IST

42.4வது ஓவரில் 200 ரன்களை ரீச் செய்தது, கையில் 4 விக்கெட்டுகள் மீதமுள்ளன

Jul 18, 2021, 6:14 pm IST

ஒருக்கட்டத்தில் 180 ரன்கள் அடிக்குமா என்று அனைவரும் எண்ணிய நிலையில், அப்படி இப்படி என்று முன்னேறி வந்துவிட்டது இலங்கை

Jul 18, 2021, 6:04 pm IST

இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா 8 ரன்களில் அவுட்

Jul 18, 2021, 6:04 pm IST

தீபக் சாஹர் ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Jul 18, 2021, 6:04 pm IST

40 ஓவர்கள் முடிவில் இலங்கை 186 - 6

Jul 18, 2021, 5:49 pm IST

இலங்கை அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது

Jul 18, 2021, 5:49 pm IST

ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய சரித் அசலங்கா 38 ரன்களில் அவுட்

Jul 18, 2021, 5:49 pm IST

சாஹர் ஓவரில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Jul 18, 2021, 5:39 pm IST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 35 ஓவர்கள் முடிவில் இலங்கை 151 - 4

Jul 18, 2021, 5:39 pm IST

சரித் அசலங்கா 29 ரன்களுடனும், தசுன் ஷானகா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Jul 18, 2021, 5:24 pm IST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 32 ஓவர்கள் முடிவில் இலங்கை 140 - 4

Jul 18, 2021, 5:23 pm IST

சரித் அசலங்கா 20 ரன்களுடனும், தசுன் ஷானகா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Jul 18, 2021, 4:57 pm IST

இலங்கை தனது நான்காவது விக்கெட்டை இழந்தது

Jul 18, 2021, 4:57 pm IST

அந்த அணியின் தனன்ஜெயா டி சில்வா 14 ரன்களில் வெளியேறினார்

Jul 18, 2021, 4:57 pm IST

க்ருனால் பாண்ட்யா ஓவரில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, புவனேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Jul 18, 2021, 4:29 pm IST

இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 91-3

Jul 18, 2021, 4:29 pm IST

பனுகா ராஜபக்ஷே 24 ரன்களிலும், மினோத் 27 ரன்களிலும் குல்தீப்பின் ஒரே ஓவரில் அவுட்

Jul 18, 2021, 4:28 pm IST
Mykhel

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது

Jul 18, 2021, 3:54 pm IST
Mykhel

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டாக வெளியேறினார் அவிஷ்கா ஃபெர்னாண்டோ

Jul 18, 2021, 3:54 pm IST
Mykhel

35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த அவிஷ்கா, சாஹல் ஓவரில் டிரைவ் செய்ய முயற்சி செய்து கேட்ச் ஆனார்.

Jul 18, 2021, 3:53 pm IST

அந்த அணி தனது முதல் விக்கெட்டை 49 ரன்களில் இழந்துள்ளது. சற்று பொறுமையாக விளையாடி இருந்தால், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கலாம்.

Jul 18, 2021, 3:38 pm IST

முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் 32-0

Jul 18, 2021, 3:37 pm IST

அவிஷ்கா 25 ரன்களுடனும், மினோத் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Jul 18, 2021, 3:35 pm IST

6 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் பனுக்கா - அவிஷிங்கா நிதான ஆட்டம்.

Jul 18, 2021, 2:41 pm IST
Mykhel

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Story first published: Friday, July 23, 2021, 23:37 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
Team India Clashes with srilanka today in Colombo
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X