For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அயல்நாட்டில் மட்டும் ரெஸ்டா? பிரஸ் மீட்டில் வசமாக சிக்கிய ரோகித் சர்மா..வச்சு செய்யும் நெட்டிசன்கள்

லக்னோ: கிரிக்கெட்டில் எப்போது பிரேக் எடுத்துக்கொள்வேன் என ரோகித் சர்மா கூறியதற்கு ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வைட் வாஷ் செய்த இந்திய அணி அடுத்ததாக இலங்கையை வீழ்த்த தயாராகி வருகிறது.

நல்ல அறிவிருந்தா கேப்டனாக இருக்கலாம்.. !! யாரை சொல்கிறார் ரோகித் சர்மா..??நல்ல அறிவிருந்தா கேப்டனாக இருக்கலாம்.. !! யாரை சொல்கிறார் ரோகித் சர்மா..??

 இலங்கையுடனான தொடர்

இலங்கையுடனான தொடர்

இந்த தொடரிலும் இந்திய அணி வைட் வாஷ் செய்துவிட்டால் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இந்தியாவில் ஹாட்ரிக் வெற்றிகளாக அமையும். இடையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் மட்டும் இந்திய அணி சொதப்பியது. அந்த தொடரின் போது ரோகித் சர்மா தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்தார்.

சிக்கிக்கொண்ட ரோகித்

சிக்கிக்கொண்ட ரோகித்

இந்நிலையில் அதற்கேற்றவாறு ஒரு கருத்தை சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பணிச்சுமையை சமாளிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் கேப்டனாக இருக்கும் நான் இனி அனைத்து போட்டிகளிலும் விளையாட முடிவெடுத்துள்ளேன். அனைத்து நாட்களிலும் இருக்க முயற்சிப்பேன். அதில் தெளிவாக உள்ளேன்.

எப்போதெல்லாம் ரெஸ்ட்

எப்போதெல்லாம் ரெஸ்ட்

இடையில் அவ்வப்போது ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்தால், அப்போது நானே சற்று அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் கம்பேக் கொடுப்பேன். அணியில் உள்ள அனைவருக்கும் எப்படி பணிச்சுமையை கையாள்வது என்பது தெளிவாக தெரியும். எனவே ஏற்கனவே போட்டுவைதுள்ள திட்டத்தின்படி சரியாக செல்கிறோம் எனக் கூறினார்.

கிண்டலடிக்கும் ரசிகர்கள்

கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இதனை கேட்ட ரசிகர்கள், அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் ஓய்வெடுப்பேன் என கூறியுள்ளீர்களே, சரியாக அயல்நாட்டு போட்டி தொடர்கள் வந்தால் மட்டும் ஓய்வு பெற்றுவிடுவேன் என மறைமுகமாக கூறுகிறீர்களா?. அதுதான் சரியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் தான் உங்களின் பாட்சா பலிக்குமா, அயல்நாடுகளில் நீங்கள் சொதப்புவது அனைவருக்கும் தெரிந்துவிடும், என்பதால் ஓய்வு காயம் என கதையை கூறிவிட்டு செல்கிறீர்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தப்பிக்க முடியாது

தப்பிக்க முடியாது

ரோகித் சர்மா தற்போது 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும் என முன்னாள் வீரர்கள் எச்சரித்த போதும், பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது. எனவே ரோகித் அயல்நாடுகளுக்கும் சென்று அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 23, 2022, 18:15 [IST]
Other articles published on Feb 23, 2022
English summary
Fans criticizing Captain Rohit sharma, after he Opens up on when he take Rest in press meet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X