For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முக்கிய வசதிகள் நீக்கம்..” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிசிசிஐ சிக்கனம்.. கொரோனா அச்சத்தில் வீரர்கள்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்திய அணி வீரர்களுக்கு புதிய சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்த போட்டிகள் வரும் பிப்ரவரி 6ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த 3 பேரு தான் இந்திய அணியின் எதிர்காலம்”பிசிசிஐ-க்கு கவாஸ்கர் காட்டிய வழி!அவ்வளவு பெரிய வீரர்களா“அந்த 3 பேரு தான் இந்திய அணியின் எதிர்காலம்”பிசிசிஐ-க்கு கவாஸ்கர் காட்டிய வழி!அவ்வளவு பெரிய வீரர்களா

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி என சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அதிகப்படியான இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காணுகிறது.

 வீரர்களுக்கு சுற்றறிக்கை

வீரர்களுக்கு சுற்றறிக்கை

இந்நிலையில் அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு பிசிசிஐ திடீர் சுற்றறிக்கை விட்டுள்ளது. அதாவது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் அனைத்து ஊழியர்கள் மற்றும் வீரர்களும் வரும் பிப்ரவரி 1ம் தேதிக்குள் அகமதாபாத்தில் ஆஜராக வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பிருந்தே அங்கு அவர்கள் குவாரண்டை இருக்கவுள்ளனர்.

தனி விமானம் இல்லை

தனி விமானம் இல்லை

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு வீரர்களையும் அழைத்து வர சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு தனி விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறை அதெல்லாம் தர முடியாது எனவும் பயணிகள் விமானத்தில் நீங்களே வந்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துவிட்டது. இதனால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் வீரர்கள் உள்ளனர்.

Recommended Video

Surprise picks in India’s ODI and T20I squads for WI Series | OneIndia Tamil
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அகமதாபாத் சென்றடைந்தவுடன் அனைத்து வீரர்களும் 3 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டு தினமும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் நெகட்டீவ் என வருபவர்கள் மட்டும் 4ம் தேதி முதல் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 6ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.

Story first published: Friday, January 28, 2022, 12:03 [IST]
Other articles published on Jan 28, 2022
English summary
BCCI Refuses to give a Charted flight for team india players, asks Rohit sharma & Co to assemble in Ahmedabad by Feb 1
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X