For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஆல்ரவுண்டர் இனி இல்லை” கேப்டன் ரோகித் சர்மா போட்ட விநோத திட்டம்.. 2வது டி20 போட்டியில் சர்ஃபரைஸ்!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக கேப்டன் ரோகித் சர்மா புதிய ஸ்கெட் போட்டுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கான 2வது போட்டி இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

“யார்ரா இந்த பொடியன்” இந்திய வீரரை கண்டு ஆடிப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. முதல் டி20ல் திருப்பம்!“யார்ரா இந்த பொடியன்” இந்திய வீரரை கண்டு ஆடிப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. முதல் டி20ல் திருப்பம்!

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 2வது டி20 போட்டியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் டி20ன் போது இருவருக்குமே கையில் காயம் ஏற்பட்டதால், அவர்கள் விலகவுள்ளனர்.

 மாற்று வீரர்கள் காத்திருப்பு

மாற்று வீரர்கள் காத்திருப்பு

தீபக் சஹாருக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், முகமது சிராஜ் என மூன்று பேர் உள்ளனர். இதே போல வெங்கடேஷ் ஐயரின் ஆல்ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்ய வாஷிங்டன் சுந்தர் அணியில் இருக்கிறார். இல்லையென்றால் ஷர்துல் தாக்கூரை அவரின் இடத்திற்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் முடிவு

திடீர் முடிவு

இந்நிலையில் விநோத முடிவை எடுத்துள்ளார் ரோகித் சர்மா. அதாவது இளம் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரை ஆல்ரவுண்டர் இடத்திற்கு கொண்டு வரவுள்ளார். அதுவும் ஸ்ரேயாஸை பவுலிங் வீச வைக்கவுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இதுகுறித்து ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சிறந்த வீரரை வெளியே உட்காரவைப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அவர் சிறந்த பவுலரும் கூட. எனவே மீண்டும் தனது பவுலிங்கை போட்டிக்குள் கொண்டு வர தயாரானால் வாய்ப்புகள் தானாக வரும் என்பது போல தெரிவித்திருந்தார்.

Recommended Video

Rohit Sharma Explains Why Shreyas Iyer Left Out Of Playing XI? | Oneindi Tamil
இந்திய அணிக்கு சிறப்பு

இந்திய அணிக்கு சிறப்பு

இதனையடுத்தே இந்த போட்டியில் ஸ்ரேயாஸை வைத்து ரிஸ்க் எடுக்கவுள்ளனர். அவர் ஏற்கனவே உள்நாட்டு போட்டிகளில் பவுலிங் வீசி வந்தவர் தான். சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அவ்வபோது பவுலிங் செய்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் தனது பவுலிங்கை நிரூபித்துவிட்டால், ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் பவுலரும் அணிக்கு கிடைத்துவிடுவார்.

Story first published: Friday, February 18, 2022, 16:54 [IST]
Other articles published on Feb 18, 2022
English summary
Captain Rohit sharma makes a different idea in playing 11 for 2nd t20 against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X