For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி அறிவிப்பு.. தினேஷ் கார்த்திக் வெளியே.. ரிஷப் பண்ட் உள்ளே.. அப்ப தோனி?

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 21 முதல் நடைபெற உள்ளது.

அந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியோடு ஒப்பிட்டால், தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நீக்கம் யார்?

நீக்கம் யார்?

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு யாருக்கு?

வாய்ப்பு யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் கோலி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். தினேஷ் கார்த்திக்குக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். பந்து வீச்சில் முகம்மது ஷமி ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆசிய கோப்பையில் ஆடிய மற்ற வீரர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர். தோனிக்கு இடம் கிடைக்குமா என கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பல விவாதங்கள் எழுந்த நிலையில், அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் தான் அவர் இடம் பெற்றுள்ளார். இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வெல்லும் பட்சத்தில், கடைசி மூன்று போட்டிகளுக்கு தோனி உட்பட பல மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் அணி அறிவிக்கப்படும் என ஒரு யூகம் உள்ளது.

கணக்குகள் என்ன?

கணக்குகள் என்ன?

கோலி கேப்டன் பதவியை தொடர, ரோஹித் துணை கேப்டன் பதவியில் நீடிப்பார். ஆசிய கோப்பையில் பெரிய அளவில் களத்தில் இறங்கி ஆடும் அணியில் வாய்ப்பு பெறாத மனிஷ் பாண்டே, ராகுல் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இப்போதாவது தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. ரிஷப் பண்ட் அணியில் பேட்ஸ்மேனாக இடம் பிடிப்பார் என தெரிகிறது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, கலீல் அஹ்மது, ஷர்துல் தாக்குர், ராகுல்

Story first published: Friday, April 17, 2020, 21:15 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
India vs West Indies - ODI squad for first two ODI’s announced Dinesh Karthik dropped. Rishab Pant came in.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X