For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“யார்ரா இந்த பொடியன்” இந்திய வீரரை கண்டு ஆடிப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. முதல் டி20ல் திருப்பம்!

கொல்கத்தா: இளம் வீரர் ரவி பிஷ்னாயின் பவுலிங்கை பார்த்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடிப்போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பாக விளையாடி வருகிறது.

சிஎஸ்கே vs மும்பை வீரர் மோதல்!!.. சிக்கலில் சிக்கிய ரோகித்.. முதல் டி20க்கான ப்ளேயிங் 11ல் குழப்பம்!சிஎஸ்கே vs மும்பை வீரர் மோதல்!!.. சிக்கலில் சிக்கிய ரோகித்.. முதல் டி20க்கான ப்ளேயிங் 11ல் குழப்பம்!

புதிய வீரர்

புதிய வீரர்

இந்த போட்டியில் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து விளையாடப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென இளம் வீரர் ரவி பிஷ்னாய்-க்கு வாய்ப்பு கொடுத்து சர்வதேச போட்டியில் அறிமுகப்படுத்தினார் ரோகித் சர்மா. அவர் அப்படி என்ன செய்துவிடப்போகிறார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

பதிலடி

பதிலடி

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத பதிலடியை கொடுத்துள்ளார் ரவி பிஷ்னாய். இன்று, தான் வீசிய முதல் ஓவரிலேயே ரவி பிஷ்னாய் அடுத்தடுத்து 3 வைட் பந்துகளை வீசி ஏமாற்றினார். இதனால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. எனினும் மற்ற பந்துகளில் சரியாக வீசி மொத்தமாக 4 ரன்களை அந்த ஓவரில் வழங்கினார்.

அசத்தல் கம்பேக்

அசத்தல் கம்பேக்

இதன் பின்னர் தனது 2வது ஓவராக ஆட்டத்தின் 11வது வது ஓவரை வீசினார். அதில் 2வது பந்தும் வைடாக சென்றது. ஆனால் சற்றும் மனம் தளராத பிஷ்னாய், அடுத்த பந்திலேயே அதிரடி வீரர் ராஸ்டன் சேஸை 4 ரன்களுக்கு எல்பிடபள்யூ ஆக்கி வெளியேற்றினார். இதன் பின்னர் அதே ஓவரிலேயே 5வது பந்திலும் மற்றொரு விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி

வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி

இளம் வீரர் தான், வைத்து சிக்ஸரை பறக்கவிடலாம் என நினைத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், அவர் விக்கெட் எடுத்த விதங்களை பார்த்து அதிர்ச்சியில் விழிப்பிதுங்கி நின்றனர். இதனால் அவரின் அடுத்த ஓவர்களில் தூக்கி அடிப்பதற்கே தயங்கியது நன்றாக தெரிந்து.

Recommended Video

Rohit Sharma Explains Why Shreyas Iyer Left Out Of Playing XI? | Oneindi Tamil
மொத்த விக்கெட்கள்

மொத்த விக்கெட்கள்

இன்றைய போட்டியில் மொத்தமாக 4 ஓவர்களை வீசிய ரவி பிஷ்னாய், வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அவரின் எகானமி 4.2 மட்டுமே ஆகும். குல்தீபுக்கு பதிலாக ரோகித் அவரை சேர்த்தது சரி தான் என பிஷ்னாய் நிரூபித்துக்காட்டிவிட்டார்.

Story first published: Wednesday, February 16, 2022, 22:14 [IST]
Other articles published on Feb 16, 2022
English summary
Indian spinner Ravi bishno makes a Massive debut with 2 wickets in 1st t20 against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X