For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய பேட்ஸ்மேன்கள் குஷி.. ஓவருக்கு 4 ரன் கொடுத்த வெ.இண்டீஸ் கர்ண பிரபுக்கள்

Recommended Video

முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கும் பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா- வீடியோ

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டெஸ்ட் தொடர் அக்டோபர் 4 முதல் தொடங்கி உள்ளது. 18 வயது ப்ரித்வி ஷா தன் அறிமுக போட்டியில் சதம் அடித்து கலக்கியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிடைத்த மரண அடியில் இருந்து மீண்டு வருமா? பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவார்களா? என்ற கேள்விகளோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களம் கண்டது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை, அந்த அணி படுபாதாளத்தில் இருக்கிறது. டி20இல் சிறந்து விளங்கும் அந்த அணி, டெஸ்ட் போட்டி என்றால் மிரண்டு வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களான கீமர் ரோச், ஜேசன் ஹோல்டர் இடம் பெறவில்லை. கீமர் ரோச் தனிப்பட்ட காரணங்களால் தன் நாட்டுக்கு சென்றுள்ளார். மறுபுறம், கேப்டன் ஜேசன் ஹோல்டர் கைவிரல் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் க்ரெய்க் ப்ராத்வைட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். சுனில் அம்ப்ரிஸ் மற்றும் ஷெர்மன் லெவிஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஷெர்மன் லெவிஸ் தன் முதல் போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் - ப்ராத்வைட், போவெல், ஹெட்மையர், ஹோப், சேஸ், சுனில் அம்ப்ரிஸ், டோவ்ரிச், பால், பிஷூ, ஷெர்மன் லெவிஸ், காப்ரியல்

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் ப்ரித்வி ஷா தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கி உள்ளது. நீண்ட காலம் கழித்து ஜடேஜா, அஸ்வின் இணைந்து டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளனர். இந்திய அணி விவரம் - ராகுல், ப்ரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், ஷமி, குல்தீப் யாதவ்

ப்ரித்வி ஷா சாதனை சதம்

ப்ரித்வி ஷா சாதனை சதம்

இங்கிலாந்தில் தொடர்ந்து டாஸ் தோற்ற இந்திய கேப்டன் கோலி, இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரராக ப்ரித்வி ஷா மற்றும் ராகுல் களமிறங்கினர். ராகுல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரு நொடி நமக்கு கண் முன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வந்து போனது. எனினும், அடுத்து வந்த புஜாரா மற்றும் பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா அட்டகாசமாக ஆடினர். புஜாரா, ப்ரித்வி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தனர். அறிமுக போட்டியில் ஆடிய ப்ரித்வி ஷா ஒருநாள் போட்டி போல விரைவாக ரன் குவித்ததோடு 99 பந்துகளில் சதம் அடித்தார். இவர் தன் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த நான்காவது இளம் வீரர் ஆவார். மேலும், குறைந்த வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையும் புரிந்தார்.

அரைசதம் அடித்த கோலி

அரைசதம் அடித்த கோலி

ப்ரித்வி ஷா 134 ரன்களும், புஜாரா 86 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் கோலி, ரஹானே இணைந்து 1௦5 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். ரஹானே 41 ரன்களில் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் கோலி 72, ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். முதல் நாள் இந்தியா 89 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காப்ரியல், பிஷூ, சேஸ் மற்றும் லெவிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

அள்ளிக் கொடுத்த கர்ண பிரபுக்கள்

அள்ளிக் கொடுத்த கர்ண பிரபுக்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் மிக மோசமாக செயல்பட்டது. அனுபவ பந்துவீச்சாளர்கள் இருவர் இல்லாத நிலையில், அந்த அணி இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஓவருக்கு 4.08 என்ற அளவில் ரன் எடுத்துள்ளது. புஜாரா ஆட்டமிழக்கும் போது, இந்தியாவின் ரன் ரேட் 4.8 ஆக இருந்தது. கோலி, ரஹானே நிதான ஆட்டம் ஆடியதால், ரன் ரேட் இறங்கியது. கர்ண பிரபுக்கள் போல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர்.

Story first published: Thursday, October 4, 2018, 18:11 [IST]
Other articles published on Oct 4, 2018
English summary
India, west Indies first test match at Rajkot - score update, players and more news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X