For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விசாகப்பட்டினத்தில் நாளை 2வது ஒருநாள் போட்டி: கருணை காட்டுமா 'மழை'?

By Mathi

விசாகப்பட்டினம்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஹெலன் புயல் தாக்கத்தினால் அங்கு நாளை மழை பெய்யுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. கொச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது.

நாளை 2வது ஒருநாள் போட்டி

நாளை 2வது ஒருநாள் போட்டி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

வென்றால் தொடர் வசம்

வென்றால் தொடர் வசம்

நாளைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும்.

கெய்ல் விலகல்

கெய்ல் விலகல்

மேற்கிந்திய தீவுகள் அணியில் காயம் காரணமாக அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் விலகி உள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பதிலடி முயற்சி

பதிலடி முயற்சி

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

மழை குறுக்கிடுமா?

மழை குறுக்கிடுமா?

தற்போது ஆந்திராவை ஹெலன் புயல் தாக்கி உள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதியான விசாகப்பட்டினத்தில் மழை தொடர்கிறது. இரு அணி வீரர்களும் நேற்றே கொட்டும் மழையில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். நாளைய போட்டி மழையின் கருணையில் இருக்கிறது.

Story first published: Sunday, November 24, 2013, 17:31 [IST]
Other articles published on Nov 24, 2013
English summary
In spite of intermittent heavy showers lashing the region since Wednesday night, cricket enthusiasts greeted the India and West Indies teams when they arrived here on Friday to play the second of the three-match one-day international cricket series at the ACA-VDCA Stadium on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X