For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரேங்கிங்ல இந்தியாவ அசைச்சிக்க முடியாது!

By Staff

டெல்லி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரின் முடிவுகள் எப்படி இருந்தாலும், முதல் இடத்தில் இருந்து இந்தியா அசைக்க முடியாது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை துவங்குகிறது.

ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் இந்தப் போட்டித் தொடரின் முடிவுகள் எப்படி இருந்தாலும், முதல் இடத்தில் இந்தியா தொடரும்.

இந்தியாதான் நம்பர் 1

இந்தியாதான் நம்பர் 1

டுபிளாசி தலைமையிலான தென்னாப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் உள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 124 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா வென்றால், அது 118 புள்ளிகளைப் பெறும். இந்தியா 118 புள்ளிகளுக்கு இறங்கிவிடும்.

ஆனாலும், தசமப் புள்ளிகள் அடிப்படையில், இந்தியா 118.47 புள்ளிகளும், தென்னாப்பிரிக்கா, 117.53 புள்ளிகளும் பெறும். அதன்படி, இந்தியா தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும்.

அசைச்சிக்க முடியாது

அசைச்சிக்க முடியாது

அதே நேரத்தில் இந்தியா இந்தத் தொடரை ஒயிட்வாஷ் செய்தால், 128 புள்ளிகளுடன் அசைக்க முடியாத நிலையில் இருக்கும். தென்னாப்பிரிக்கா 107 புள்ளிகளுக்கு சரியும். இதனிடையில், ஆஷஷ் தொடரில் 3-0 என்று முன்னிலையில் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு மூன்றாவது இடம் நிச்சயம்.

4வது இடத்தை பிடிக்குமா இங்கிலாந்து

4வது இடத்தை பிடிக்குமா இங்கிலாந்து

தொடரை 4-0 என்று ஆஸ்திரேலியா வென்றால், 104 புள்ளிகளைப் பெறும், இங்கிலாந்து 99 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்படும்.

சிட்னியில் இன்று துவங்கும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்றால், ஆஸ்திரேலியா 102 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், இங்கிலாந்து, 101 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தையும் பிடிக்கும்.

கோஹ்லிக்கு காத்திருக்கும் மைல்கல்

கோஹ்லிக்கு காத்திருக்கும் மைல்கல்

பேஸ்ட்மேன்களுக்கான தரவரிசையில் 2வது இடத்தில் விராட் கோஹ்லி, 900 புள்ளிகளை முதல் முறையாக முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, 893 புள்ளிகளுடன் அவர் உள்ளார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அந்த மிகப் பெரிய வாய்ப்பு அவருக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்வீட் ஸ்மித் 947 புள்ளிகளுடன் யாரும் நெருங்க முடியாத நிலையில் உள்ளார்.

தரவரிசையில் 3வது இடம் புஜாராவுக்கு

தரவரிசையில் 3வது இடம் புஜாராவுக்கு

சத்தேஸ்வர் புஜாரா, 873 புள்ளிகளுடன், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லா, 776 புள்ளிகளுடன் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளார். பவுலர்களில், தென்னாப்பிரிக்காவின் கோகிசோ ரபடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சனைவிட 9 புள்ளிகள் குறைவாகப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களில் யார் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது அடுத்த நடைபெறும் டெஸ்ட்கள் முடிவு செய்யும்.

Story first published: Thursday, January 4, 2018, 17:39 [IST]
Other articles published on Jan 4, 2018
English summary
India will retain top spot even loosing series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X