For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் கொடுத்த வெற்றியால தாறுமாறா நம்பிக்கை அதிகரிச்சிருக்கு

டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இவ்ளோ தான் வெற்றி வாய்ப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் பலம்.. டிராவிட் கணிப்பு! இவ்ளோ தான் வெற்றி வாய்ப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் பலம்.. டிராவிட் கணிப்பு!

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் கொடுத்த தன்னம்பிக்கையால் இந்திய அணி சிறப்பான வகையில் தயாராகி உள்ளதாக என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தின் சௌதாம்டனில் வரும் மாதம் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு பயணம்

இங்கிலாந்துக்கு பயணம்

இந்த அணி அடுத்த மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. முன்னதாக இந்தியாவிலும் தொடர்ந்து இங்கிலாந்திலும் குவாரன்டைனில் ஈடுபடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

வெற்றி கொடுத்த தன்னம்பிக்கை

வெற்றி கொடுத்த தன்னம்பிக்கை

இந்த போட்டியில் வெற்றி பெறுவதை இரு அணிகளும் பெருமையாக பார்த்துவரும் நிலையில், இந்த போட்டி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரின் வெற்றி கொடுத்த தன்னம்பிக்கை இந்திய அணிக்கு சிறப்பான ஏற்றத்தை அளித்துள்ளதாக என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக தயாராகலாம்

சிறப்பாக தயாராகலாம்

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக இன்னும் ஒரு மாத காலம் உள்ளதால் பேட்டிங் யூனிட்டும் சிறப்பாக தயாராக முடியும் என்றும் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் சிறப்பான வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு அதிக சாத்தியம்

வெற்றிக்கு அதிக சாத்தியம்

இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்தியா சிறப்பான வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவங்களிலான தொடர்களில் மோதிய நிலையில் இந்திய அணி சிறப்பான வெற்றியை 3 தொடரிலும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 10, 2021, 11:25 [IST]
Other articles published on May 10, 2021
English summary
There is more than one month to prepare with lots of experience in the batting unit
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X