For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

India vs Australia 5th ODI: யாருக்கு வெற்றி? டெல்லி பெரோஷா கோட்லா மைதான சாதனை வரலாறு

டெல்லி: டெல்லி பெரோஷ்லா கோட்லா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஒரு நாள் போட்டிகளில் 3ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், நாளைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டி20 தொடர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில், ஏறகனவே டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்று சமனில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது.

வார்னே! இது உங்களுக்கே ஓவரா இல்ல! டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா? வார்னே! இது உங்களுக்கே ஓவரா இல்ல! டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா?

 ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். உலக கோப்பை தொடருக்கான முந்தைய போட்டி என்பதால் ரசிகர்களின் ஆர்வம் போட்டியின் வெற்றியின் மீதே உள்ளது.

மைதான ராசி

மைதான ராசி

இந்திய அணிக்கு பல தருணங்களில் ராசியான மைதானமாக இருப்பது தான் இந்த பெரோஷா கோட்லா மைதானம். இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கும் மற்றும் ராசியான ஒன்று என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி உள்ளனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலாக நடந்த 4 ஒரு நாள் போட்டிகளில் 3ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களாகும்.

குறைந்தபட்ச ரன்கள்

குறைந்தபட்ச ரன்கள்

குறைந்தபட்சமாக 115 ரன்கள் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்டதாகும். அதிக பட்ச சேஸ் 281 மற்றும் குறைந்தபட்சம் 167 என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இணையான வகையில் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, March 12, 2019, 17:21 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
India will defeat Australia in delhi and may clinch one day series tomorrow, fans hopes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X