விராட் கோலி இந்தியா திரும்பறதுக்குள்ள எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தணும்... இல்லன்னா கஷ்டம்தான்!

சிட்னி : தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பவுள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில், குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் தொடர்களிலேயே தன்னுடைய அணியை வெற்றி அணியாக அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார்.

இல்லையென்றால் டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளையும் இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு திரும்பும் கோலி

நாடு திரும்பும் கோலி

ஆஸ்திரேலியாவில் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் மற்றும் அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்கவுள்ள விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொடி நாடு திரும்பவுள்ளார். இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தல்

மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தல்

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாகவே குறைந்த ஓவர்கள் போட்டிகளில் தன்னுடைய அணியை சிறப்பாக விராட் கோலி செம்மைப்படுத்த வேண்டும் என்றும நாடு திரும்புவதற்கு முன்னதாக இதை சரிவர செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கிளார்க் எச்சரிக்கை

கிளார்க் எச்சரிக்கை

அவ்வாறு செய்யாதபட்சத்தில் 4க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவின் ரோல் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தீவிரமாக பௌலிங் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தீவிரமாக இருக்க வேண்டும்

தீவிரமாக இருக்க வேண்டும்

ஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும்வகையில் பும்ராவின் பௌலிங் இருக்க வேண்டும் என்றும் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். அவர்களை ஏற்கனவே பும்ரா அதிகமான முறைகள் வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
He’s got Warner’s measure at the moment, he’s got him out a number of times -Michael Clarke
Story first published: Wednesday, November 25, 2020, 14:22 [IST]
Other articles published on Nov 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X