For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND Vs PAK: அந்த ஒரு விஷயம்.!! மறக்காம விளையாடுங்க..!! இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்

லண்டன்:ரோகித் மற்றும் கோலியை சுற்றித்தான் அணியின் வீரர்கள் ஆட வேண்டும் என்றும், அப்படி இருந்தால் தான் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் கூறியிருக்கிறார்.

வழக்கமாக, இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே சொல்ல வேண்டியது இல்லை. அதுவும் உலக கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஞாயிறன்று நடக்கிறது. இந்த தொடரில், பாகிஸ்தான் 4 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

India will keep on playing very cautious against pakistan match says sachin tendulkar

இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை சாய்த்து, நியூசி.க்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே உலக கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.

வெறும் 30 தானா? வாசிம் அக்ரமே சொல்லியாச்சு.. பாக். ரசிகர்கள் எப்படி தாங்கப்போறாங்க!! வெறும் 30 தானா? வாசிம் அக்ரமே சொல்லியாச்சு.. பாக். ரசிகர்கள் எப்படி தாங்கப்போறாங்க!!

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியா எப்படி ஆட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவானது. ரோகித், கோலியும் அனுபவமிக்க வீரர்கள்.

எனவே அவர்கள் இருவர் தான் பாக்.கின் முக்கிய டார்கெட். அவர்களை வெகு விரைவாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் வீரர்கள் தயாராக இருப்பார்கள். குறிப்பாக, வஹாப் ரியாசும் அமீரும் கோலி மற்றும் ரோத்தின் விக்கெட்டை விரைவில் எடுக்க நினைப்பார்கள்.

இந்த வியூகத்தை ரோகித்தும், கோலியும் அறிவார்கள். எனவே இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில் உறுதியாக இருப்பார்கள். ரோகித் மற்றும் கோலியை சுற்றித் தான் மற்ற வீரர்கள் ஆட வேண்டும். முகமது அமீர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்து வீசினார். எனவே, அவரது பவுலிங்கில் தடுப்பாட்டம் ஆடுவதில் தவறில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக புதியதாக எதையும் முயற்சிக்க வேண்டாம். களத்தில் ஆக்ரோஷமாக ஆடினால் போதும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே இந்த ஆக்ரோஷம் முக்கியம். இந்தியா, பாகிஸ்தானை மிக எளிதில் வீழ்த்தி விட முடியும். ஆனால், பாகிஸ்தானை அவ்வளவு குறைவாக எடை போட முடியாது. அவர்கள் சிறப்பாகவே ஆடி வருகின்றனர் என்றார்.

Story first published: Saturday, June 15, 2019, 16:30 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
India will keep on playing very cautious against Pakistan match says Sachin Tendulkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X