For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாக்பூரில் ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி… அதிரடி வியூகங்களுடன் களத்தில் இறங்கும் இந்திய அணி

Recommended Video

Ind vs Aus 2nd ODI | 2வது ஒருநாள் போட்டி: அதிரடி வியூகங்களுடன் களத்தில் இந்திய அணி

நாக்பூர்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றியைத் தொடர சில அதிரடி வியூகங்களை வைத்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி 2 டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டி-20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இந்தியா உள்ளது.

பேட்டிங்கில் நல்ல பெயர் எடுத்தாலும் ரெண்டு தடவையும் இப்படி ஆகிப் போச்சே விஜய் ஷங்கர்!! பேட்டிங்கில் நல்ல பெயர் எடுத்தாலும் ரெண்டு தடவையும் இப்படி ஆகிப் போச்சே விஜய் ஷங்கர்!!

இந்திய அணியில் மாற்றங்கள்

இந்திய அணியில் மாற்றங்கள்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றியைத் தொடர சில மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரோகித் சர்மாவின் ஆட்டம்

ரோகித் சர்மாவின் ஆட்டம்

முதல் போட்டியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா பெரிய அளவிலான ரன்களைச் சேர்க்கவில்லை என்றாலும், ஓரளவு கைகொடுத்தார். ஷிகர் தவான் டக் அவுட் ஆனாலும் அவருக்கான வாய்ப்பு மேலும் இருப்பதாகவே தெரிகிறது

தோனி, ஜாதவ்

தோனி, ஜாதவ்

பார்மில் உள்ள கே.எல்.ராகுல் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. தோனி, கேதார் இருவரும் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

சாஹலுக்கு வாய்ப்பு

சாஹலுக்கு வாய்ப்பு

ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் சமி, பூம்ரா, குல்தீப் அசத்தி வரும் நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.

பதிலடி கொடுக்க திட்டம்

பதிலடி கொடுக்க திட்டம்

இந்திய அணி 2-0 என முன்னிலை பெற வரிந்துகட்டும் நிலையில், ஆஸ்திரேலிய அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மார்ஷ் ஆடுவாரா?

மார்ஷ் ஆடுவாரா?

கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஓரளவு பார்மில் உள்ளனர். பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கும் வகையில் ஷான் மார்ஷ் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

அனல் பறக்கும்

அனல் பறக்கும்

பெஹரன்டார்புக்கு பதிலாக ஆண்ட்ருடை சேர்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இரு அணிகளுமே வெற்றியை வசப்படுத்தும் உறுதியுடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Tuesday, March 5, 2019, 17:27 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
Australia will be looking to level the series against India in second ODI in the five-match series. The action continues on Today in Nagpur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X