For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கி. மண்ணில் இந்தியாவை துரத்தும் ‘அந்த’ ராசி..! நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் மாறுமா?

நாட்டிங்ஹாம்:உலக கோப்பை வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துடன் இந்தியா இன்று மோத உள்ள போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. மழையால் சில போட்டிகள் பாதிக்கப்பட்டாலும், மற்ற ஆட்டங்களில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன் அடிப்படையில், இன்றைய போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா மோதுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை 106 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 55 ஆட்டங்களில் இந்தியாவும், 45 ஆட்டங்களில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது, 5 ஆட்டங்களில் முடிவு இல்லை.

எல்லோ அலர்ட் தந்துவிட்டனர்.. விரக்தியில் இந்தியா.. மகிழ்ச்சியில் நியூஸி. அணி.. பின்னணி என்ன? எல்லோ அலர்ட் தந்துவிட்டனர்.. விரக்தியில் இந்தியா.. மகிழ்ச்சியில் நியூஸி. அணி.. பின்னணி என்ன?

என்ன சுவாரசியம்?

என்ன சுவாரசியம்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இவ்விரு அணிகளிடையே சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இரு அணிளும், இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில், இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நியூசி. வெற்றி

நியூசி. வெற்றி

1975-ம் ஆண்டு தொடரில், 'ஏ' பிரிவில் இந்தியா இடம் பிடித்திருந்தது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இப்போட்டியில், முதலில் ஆடிய இந்தியா 230 ரன்கள் சேர்த்தது. பின்னர், இலக்கை விரட்டிய நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அசுர பலத்துடன் மோதல்

அசுர பலத்துடன் மோதல்

1979ல் உலக கோப்பையில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நியூசிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. 1987ல் தொடரில் நடப்புச் சாம்பியன் என்ற அசுர பலத்துடன் இந்திய அணி, 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை எதிர்கொண்டது.

16 ரன்களில் வெற்றி

16 ரன்களில் வெற்றி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களம் கண்ட இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. இலக்கை துரத்திய நியூசிலாந்து, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, அதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மறக்க முடியாத கவாஸ்கர்

மறக்க முடியாத கவாஸ்கர்

அதே தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில், கவாஸ்கர் 103 ரன்களை மறக்க முடியாது. இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் விளங்கினார்.

சூப்பர் 6 பிரிவு

சூப்பர் 6 பிரிவு

1992 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நாட்டிங்ஹாம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தான், 1999 உலகக் கோப்பையில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளும் மோதின.

நியூசி.க்கு வெற்றி

நியூசி.க்கு வெற்றி

அந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. பின்னர், இறங்கிய நியூசிலாந்து 48 புள்ளி 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

வென்றது இந்தியா

வென்றது இந்தியா

பின்னர், 2003 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 146 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்தியா 40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 தொடர்கள்

3 தொடர்கள்

இப்போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை கட்டுப்படுத்திய ஜாகீர் கான் ஆட்டநாயகான தேர்வானார். இதையடுத்து, 2007, 2011, 2015 ஆகிய 3 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை இந்தியா சந்திக்கவில்லை.

ராசி முறியடிக்கப்படுமா?

ராசி முறியடிக்கப்படுமா?

மேலும், உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இங்கிலாந்து மண்ணில் 3 முறை மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணியே வெற்றிக் கொடியை நாட்டி உள்ளது. தற்போதும் இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து, அந்த ராசியை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, June 13, 2019, 12:01 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
India will meet newzealand in today’s world cup match after 16 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X