For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தான் ஜெயிக்கணும்…!! சொந்த அணியின் காலை வாரிய பாக். கேப்டனின் மாமா…!! #INDvsPAK

எட்டாவா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தான் ஜெயிக்க வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவின் தாய்மாமா கூறியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில தினங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நீங்க ரெஸ்ட் எடுங்க.. அவரை கொண்டு வருவோம்.. பாக். அணிக்கு எதிராக இந்தியா களமிறக்கும் ஜாம்பவான்! நீங்க ரெஸ்ட் எடுங்க.. அவரை கொண்டு வருவோம்.. பாக். அணிக்கு எதிராக இந்தியா களமிறக்கும் ஜாம்பவான்!

சர்பிராஸ் தாய்மாமா

சர்பிராஸ் தாய்மாமா

இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹசன். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார்.

இந்தியா ஜெயிக்கணும்

இந்தியா ஜெயிக்கணும்

இந்தியா, பாக். போட்டி பற்றி அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதே வேளையில், என்னுடைய மருமகன் சர்பிரஸ் அகமதுவும் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

பரவிய சூரிய வெளிச்சம்

பரவிய சூரிய வெளிச்சம்

இதனிடையே, வெள்ளியன்று மான்செஸ்டரில் நல்ல மழை பெய்துள்ளது. பிட்ச் முழுதும் போர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மழை விட்ட பிறகு பளீர் சூரிய வெளிச்சம் மைதானம் முழுவதும் பரவியது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டென மாறும் வானிலை

சட்டென மாறும் வானிலை

ஏனெனில் லண்டன் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இந்திய, பாக் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். ஞாயிறு மதியம் சிறிய அளவில் மழை பெய்யலாம் என்று வானிலை முன்னறிவுப்பு கூறுகிறது. அதன் காரணமாக, ஆட்டத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எதுவும் நடக்கலாம்

எதுவும் நடக்கலாம்

பொதுவாக, இங்கிலாந்தின் வானிலை நிலவரத்தை, அதிலும் குறிப்பாக கோடைக் காலங்களில் கணிப்பது சற்று கடினம் என்று வானிலை நிபுணர்கள் கூறி இருக்கின்றனர். ஆக மொத்தத்தில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான் தற்போது உள்ளது.

Story first published: Sunday, June 16, 2019, 8:32 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
India have to win agaiasnt Pakistan, says pak captain sarfaraz ahmed’s uncle.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X