For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பனியோ.. பாலைவனமோ.. எங்கு விளையாடினாலும் வெற்றி தான்.. இந்திய அணிக்கு கிடைத்த தடாலடி பாராட்டு!

புதுடெல்லி : பனி அல்லது பாலைவனத்தில் எங்கு விளையாடினாலும் இந்திய அணி வெற்றியடையும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பிங்க் பந்தை கொண்டு இந்திய அணி நாளை பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த பந்தில் விளையாடி அவர்களுக்கு அனுபவம் இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

விராத் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு இந்த பந்தில் விளையாடிய அனுபவம் இல்லை என்ற நிலையில், இந்திய அணி எந்த களத்திலும் போட்டியிட்டு வெற்றியை குவிக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தாயை இழந்த துக்கம்.. ஜாம்பவான் கையால் அறிமுகம்.. தாங்க முடியாமல் கண் கலங்கிய 16 வயது வீரர்!தாயை இழந்த துக்கம்.. ஜாம்பவான் கையால் அறிமுகம்.. தாங்க முடியாமல் கண் கலங்கிய 16 வயது வீரர்!

 முதல்முறையாக இந்தியா பங்கேற்பு

முதல்முறையாக இந்தியா பங்கேற்பு

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டிக்காக காத்துள்ளனர்.

 பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் முன்னெடுப்பில் இந்த போட்டி நாளை துவங்கவுள்ளதையடுத்து கொல்கத்தா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வங்கதேச பிரதமர் உள்ளிட்ட இருநாடுகளின் பல்வேறு அரசியல் தலைவர்கள் போட்டியின் முதல்நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

 போட்டியில் பங்கேற்க ஆர்வம்

போட்டியில் பங்கேற்க ஆர்வம்

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவுள்ள இந்த பகலிரவு போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் கொல்கத்தா வந்தடைந்துள்ள நிலையில் அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 பல்வேறு தரப்பினரும் ஆதங்கம்

பல்வேறு தரப்பினரும் ஆதங்கம்

நாளைய போட்டி பந்தில் விளையாடப்பட உள்ள நிலையில், இந்த பந்தில் விளையாடிய அனுபவம் கேப்டன் விராத் கோலி, துணை கேப்டன் ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய 5 ஆட்டக்காரர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வங்கதேச அணிக்கும் இந்த பந்தில் விளையாடிய அனுபவம் இல்லை.

 இந்தியா, வங்கதேசம் அனுபவம் பெறவில்லை

இந்தியா, வங்கதேசம் அனுபவம் பெறவில்லை

கடந்த 2015 முதலே பிங்க் பந்துகளை கொண்டு டெஸ்ட் போட்டிகள் சர்வதேச அளவில் நடைபெற்றுவந்த போதிலும் இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் இந்த பந்தை கொண்டு விளையாடப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை.

 முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெருமிதம்

முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெருமிதம்

பிங்க் பந்துகளில் விளையாடி இந்திய அணிக்கு அனுபவம் இல்லை என்ற கூற்றுக்கு தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார். தற்போதைய இந்திய அணி ஐஸ்லாந்தின் பனியிலோ சஹாராவின் பாலைவனத்திலோ எங்கே விளையாடினாலும் வெற்றி வாகை சூடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 21, 2019, 12:43 [IST]
Other articles published on Nov 21, 2019
English summary
Former cricketer Gavaskar says that India will play any Situations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X