For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 3 பேரும் நல்லா விளையாடினா தான் உலக கோப்பை நமக்கு..! டிராவிட் சொல்றத கேளுங்க

மும்பை: எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை இந்திய பவுலர்கள் தகர்த்தால் உலக கோப்பை நிச்சயம் இந்தியாவுக்கு தான் என்று ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

இதோ... அதோ என்று எல்லோரும் காத்திருந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கு இன்னும் நாட்கள் குறைவாகவே இருக்கின்றன. மே 30ம் தேதியை எதிர்பார்த்து ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்திய அணியினர் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வரும் 22ம் தேதி இங்கிலாந்து பயணிக்கின்றனர். உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன.

கணிக்கும் ஜாம்பவான்கள்

கணிக்கும் ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இருப்பினும், இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் உச்சக்கட்ட கணிப்பு.

பேட்டிங்குக்கு சாதகம்

பேட்டிங்குக்கு சாதகம்

இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த உலக கோப்பை தொடரானது அதிக ரன்கள் அடிக்கக் கூடிய ஆட்டங்களாக அமையும் என்று தெரிகிறது. இந்திய அணியிலும் அதற்கேற்பதான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டிராவிட் கூறுவது என்ன?

டிராவிட் கூறுவது என்ன?

இது குறித்து பேசிய ராகுல் டிராவிட், எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ் மென்களை இந்திய பவுலர்கள் சாய்த்தால் கோப்பையை வெல்லலாம் என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த முறை ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக இருக்கப்போகிறது.

பந்துவீச்சில் கவனம்

பந்துவீச்சில் கவனம்

இதுமாதிரி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பவுலர்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்று. முடிந்தளவிற்கு எதிரணியை எந்த அணி கட்டுப்படுத்துகிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணிக்கு இது பலமே. பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பவுலர்கள். இந்த மூவரும் ஒவ்வொரு போட்டியின் போதும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இந்தியாவுக்கு கோப்பை

இந்தியாவுக்கு கோப்பை

அதிக ரன்கள் எடுக்கப்படும் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களை பெற்றிருப்பது பலம், அதனை மனதில் வைத்து செயல்பட்டால் கோப்பை இந்தியாவுக்கு தான் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 19, 2019, 11:30 [IST]
Other articles published on May 19, 2019
English summary
Rahul Dravid has said that if Indian bowlers beat the Opposition's middle order batsmens, World Cup is definitely for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X