கடைசி போட்டியில் விளையாடும் ஜூலன் கோஸ்வாமி.. ஹர்மன்பிரீத் செய்த கவுரவம்.. புதுமையான முறையில் டாஸ்

லண்டன் : இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீராங்கனை ஜுலாம் போஸ்வாமி தெரிவித்துள்ளார் .

Recommended Video

Women's Asia Cup: Indian Team அறிவிப்பு! Jemimah Returns! | Aanee's Appeal | *Cricket

இந்த நிலையில் இந்திய அணி ஏற்கனவே தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் சமிபிரதாய ஆட்டம் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுணர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுணர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?

கவுரவம்

கவுரவம்

இந்த நிலையில் ஜுலன் கோஸ்வாமி கடைசி போட்டியில் பங்கேற்பதால் அவரை கௌரவப்படுத்தும் விதமாக ஹர்மன்பிரித் கவுர் செய்த காரியம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பொதுவாக டாஸ் போடும்போது போட்டி நடுவர், கிரிக்கெட் வர்ணனையாளர் ,இரண்டு அணி கேப்டன்களும் தான் இருப்பார்கள்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

ஆனால் ஜுலன் கோஸ்வாமி கடைசி போட்டியில் விளையாடுவதால் ஹர்மன்பிரித் சிங் அவரை டாஸ் போட சொல்லி , டாசை தேர்ந்தெடுக்க சொன்னார். ஹர்மன்பிரித் சிங் அழைப்பை ஏற்று ஜுலன் கோஸ்வாமியும் டாசை போட்டார். கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரே அணியில் இரண்டு பேர் நின்று டாஸ் போட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சாதனைகள்

இந்த டாஸில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தது . சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகளை ஜுலன் கோஸ்வாமி வீழ்த்திருக்கிறார்.இதன் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

கேப்டன்களின் கேப்டன்

கேப்டன்களின் கேப்டன்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை, மகளிர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை கோஸ் வாமி படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலன் கோஸ்வாமி கேப்டனாக இருந்த போது தான் ஹர்மன்பிரித் கவுர் முதல் முறையாக அவரது தலைமையில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India women captain Harmanpreet kaur tributes to jhulan goswami farewell game கடைசி போட்டியில் விளையாடும் ஜூலன் கோஸ்வாமி.. ஹர்மன்பிரீத் செய்த கவுரவம்.. புதுமையான முறையில் டாஸ்
Story first published: Tuesday, September 27, 2022, 10:52 [IST]
Other articles published on Sep 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X